சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடியவருக்கு 'செம கவனிப்பு'

Added : செப் 20, 2019
Advertisement

எரியோடு: எரியோடு கோவிலுாரில் ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்த தெரியாத பெண்ணை ஏமாற்றி, கார்டை திருடியவரை பிடித்த பொதுமக்கள் 'கவனித்து' போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வடுகம்பாடி ஆனைகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள். நேற்று காலை கோவிலுார் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அவருக்கு உதவுவது போல முன்வந்தார் லந்தகோட்டை சீரங்கபட்டி வீரமணி 25.பழநியம்மாளிடம் ரகசிய எண்ணை கேட்டு பணம் எடுத்துக் கொடுத்தார். பின்னர் வேறோரு ஏ.டி.எம்., கார்டை பழனியம்மாளிடம் கொடுத்துவிட்டு சென்றார். சக்திநகரில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்., அறைக்கு சென்ற அவர், பழனியம்மாளின் கார்டு, ரகசிய எண்ணை பயன்படுத்தி ரூ.4,500 எடுத்துள்ளார். பணம் எடுத்த தகவல் அலைபேசிக்கு வரவே, உஷாரான பழனியம்மாள் உறவினர்களின் உதவியுடன் வீரமணியை பிடித்தார். அப்பகுதியினர் சிலர் வாலிபரை 'கவனித்து' எரியோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X