சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவிபத்துகளில் இருவர் பலி

Added : செப் 20, 2019
Advertisement

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ஊத்தங்கால் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 20. இவரது தாய் வளர்மதி 40. பாட்டி கலாவதி 60, ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு சென்றார். சீரங்கன் நகர் அருகே வாகனம் மோதி 3 பேரும் துாக்கி வீசப்பட்டனர். கலாவதி சம்பவ இடத்தில் பலியானார். வளர்மதி, நவநீதகிருஷ்ணன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.எரியோடு: எரியோடு அருகே எருதப்பன்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் 60. சித்துார் ஊராட்சியில் பிட்டராக இருந்தார். இவர் புதிதாக கட்டும் வீட்டிற்கு சிமென்ட், கம்பி போன்ற பொருட்களை வேனில் ஏற்றிவிட்டு அதன் பின்னாலேயே இருசக்கர வாகனத்தில் சென்றார். தண்ணீர்பந்தம்பட்டி அரசு கல்லுாரி அருகே வேகத்தடையில் சரக்கு வேன் மெதுவாக சென்றது. பின்னால் வந்த சின்ராஜ், வேன் மீது மோதி சம்பவ இடத்தில் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X