சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடை, பெட்ரோல் பங்க்கில் திருட்டுக் கும்பல்

Added : செப் 20, 2019
Advertisement

திருக்கோவிலுார்:திருக்கோவிலுாரில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளில் கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார், வடக்கு வீதியில் உள்ள ஒரு பாத்திர கடைக்கு நேற்று மாலை இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பொருட்கள் வாங்க வந்தனர். மூவரும் வெளிநாட்டினரைப் போன்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்.சிறிது நேரத்தில் கல்லாவில் அமர்ந்திருந்த நபரை பேச்சுக் கொடுத்து திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் செய்துள்ளனர். அவர்கள் சென்றதும் கல்லாவில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்ததில் மூன்று பேரின் கைவரிசை தெரியவந்தது.சில மணி நேரத்தில் இதே கும்பல், கீழத்தாழனூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்த 17 ஆயிரத்து 500 ரூபாயை திருடிக் கொண்டு, அடுத்ததாக மாம்பழப்பட்டு அருகே உள்ள ஒரு கடையில் கல்லாவில் இருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடங்களில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சி.சி.டி.வி., கேமராவில் பதிவான மர்ம நபர்கள் மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X