சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகார் கொடுத்தவரை தாக்கியவர் கைது

Added : செப் 20, 2019
Advertisement

விழுப்புரம்:கலெக்டரிடம் புகார் கொடுத்தவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.ஆரோவில் அடுத்த எடையஞ்சாவடியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 40; இவர், தனது ஊரில் தண்ணீர் பைப்புகள் சேதமாகி உள்ளது என கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில், நேற்று முன்தினம் ஆய்வு செய்த அதிகாரிகள், சண்முகசுந்தரம், 37; என்பவரின் வீட்டில் பொருத்தியிருந்த மின் மோட்டார் இணைப்பை துண்டித்தனர்.இதனால், ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம், அவரது மனைவி சுமித்ரா மற்றும் உறவினர் ஒருவர் என மூவரும் சத்தியமூர்த்தியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், சண்முகசுந்தரம் உட்பட 3 பேர் மீது ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரத்தை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X