உ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (35)
Advertisement

லக்னோ: ''உ.பி., மாநிலம் குறித்த கருத்து மாற்றப்பட்டு, அதன் அடையாளம் மீட்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


உ.பி., முதல்வராக, ஆதித்யநாத் யோகி பொறுப்பேற்று, 30 மாதங்கள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அனைவருக்கும் வீடு வசதி ஏற்படுத்தி தரும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, விவசாயிகளுக்கான, கிஷான் காப்பீடு, கழிப்பறை கட்டுதல், மருத்துவ காப்பீடு வழங்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி, உ.பி., மாநிலம் சாதனை படைத்துள்ளது.

உ.பி.,யில், 14 ஆண்டு இடைவெளிக்குப் பின், 2017, மார்ச் 19ல், மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், உ.பி., மாநிலம் தன் சொந்த அடையாளத்தை இழந்து, பின் தங்கியது. பா.ஜ., ஆட்சி அமைந்த பின், என் அரசில், உ.பி., மாநிலம் குறித்த தவறான கருத்துக்கள் மாற்றப்பட்டு, அதன் பழைய அடையாளம் மீட்கப்பட்டுள்ளது. இதுவே எங்கள் அரசின் மிகப்பெரிய சாதனை. மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை மேம்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளில், கலவரம் போன்ற எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. கொள்ளை, திருட்டு சம்பவங்கள், 54 சதவீதமும், பாலியல் பலாத்காரம், 36 சதவீதமும், ஆள் கடத்தல், 30 சதவீமும், மோதல் சம்பவங்கள், 38 சதவீமும் குறைந்துள்ளன.

இங்கிருந்த கிரிமினல் குற்றவாளிகளில் பலர், சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்; மற்றவர்கள் மாநிலத்தை விட்டு தப்பியோடிவிட்டனர். மாநிலத்தில், புதிதாக, 41 போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன், இங்கு, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை இருந்தது. எங்கள் ஆட்சியில், விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, அந்த நிலையை மாற்றியுள்ளோம். மாநிலம் முழுவதும், 86 லட்சம் விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் கொள்முதல், இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் நடந்த பெரும்பான்மையான மத நிகழ்ச்சிகளும் அமைதியாக முடிந்துள்ளன. உ.பி.,யை விட, பாதியளவே உள்ள சிறிய மாநிலங்களில் கூட, லோக்சபா தேர்தலின் போது, வன்முறைகள் நடந்தன. ஆனால், இங்கு, தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில், உ.பி., மாநிலம் பெரியளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம், இளைஞர்களுக்கு பதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 70 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் வகையில், உ.பி., மாநிலத்தில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். அப்போது, தன் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட சாதனைகள் குறித்த பட்டியலையும் ஆதித்யநாத் வெளியிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
20-செப்-201917:17:12 IST Report Abuse
ganapati sb desathin periya maanilathil maatrathai konduvara ayarathu ulaikum muthalvar yogi aditynathirku paaratukkal
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-செப்-201907:13:42 IST Report Abuse
Anandanகுழந்தைகளின் சப்பாத்திக்கு உப்பு கொடுத்ததய்யா சொல்றப்பா நீ....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-செப்-201910:01:21 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅது ஒரு செட்டப்புன்னு ஏற்கனவே பத்திரிக்கைகளில் செய்தி வந்தது இன்னும் உனக்கு தெரியாதா அப்பு?...
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி பாஜக ஒன்றும் பண்டார பரதேசி கட்சி அல்ல. அந்த கட்சியில் திறமைவாய்ந்த பலர் உள்ளனர். திமுக ஒன்றும் சங்கரமடமல்ல என்று சூளுரைத்து ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்க தனது மகனையே அடுத்த தலைவராக்கிய திருடர்கள் கூட்டமல்ல. தகுதியுள்ளவர்கள் யாவரும் தலைவராகலாம் பாஜகாவில்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-செப்-201907:15:15 IST Report Abuse
Anandanசீனு அவங்க திறமைகளைதான் இவ்வளவு நாட்களாய் பார்க்கிறோமே. மந்திரியிடம் கேள்வி கேட்டால் அவர் அதிகாரிகள் பதில் சொல்லுவார் என்கிறார். இதுவல்லவோ திறமை. உங்களை நீங்களே பாராட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் மந்திரிகள் எல்லோருமே பலவிதமாக உளறுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்களே....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-செப்-201910:05:42 IST Report Abuse
Chowkidar NandaIndiaஉங்கள் ஆட்களின் திறமையை தான் அறுபது வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோமே. வாரிசு அரசியல், இயலாமை, உருப்படியில்லாத கொள்கை, தலைவிரித்தாடிய தீவிரவாதம் இப்படி தானே இருந்தது நாடு. நாட்டில் எது நடந்தாலும் எனக்கென்ன, எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரதமர். ஊழலை தவிர வேறேதும் அறியாத அமைச்சர்கள் பட்டாளம். இதற்கு உங்களை போன்றவர்களின் பாராட்டு விழா வேறு....
Rate this:
Share this comment
Cancel
20-செப்-201911:08:53 IST Report Abuse
நக்கல் பிஜேபியில் நேர்மையான தலைவர்களுக்கு சிறிதும் பஞ்சம் இல்லை, அதற்கு காரணம் RSS பயிற்சி உள்கட்சி ஜனநாயகம்.... எதிர்கால இந்தியாவிற்கு பல நல்ல தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் RSS/பிஜேபிக்கு கோடானு கோடி நன்றி... எனது இந்தியா ஒழுக்கமான தேசபக்தர்கள் உள்ள கட்சியின் கையில் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது... இந்தியாவை தீயவர்களிடம் இருந்து விடுவித்த அந்த கடவுளுக்கும், மக்களுக்கும் என் நன்றி... இருக்கும் கொஞ்சநஞ்ச தேச விரோதிகளும் ஒழிந்து தேசபக்தர்கள் நிறைந்த இடமாக மாற்ற கடவுளை பிரார்த்திக்கிறேன்...வாழ்க பாரதம்...
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
20-செப்-201915:50:50 IST Report Abuse
Sathya Dhara நக்கல் அவர்களின் பிரார்த்தனையில் நாம் அனைவரும் இணைவோம். வாழ்க பாரதம். வீழ்க தேச துரோகிகள்.......
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-செப்-201907:15:47 IST Report Abuse
Anandanஅடப்பாவிகளா, இந்த சொதப்பல்களையே திறமைனு சொல்றீங்களே....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-செப்-201907:16:27 IST Report Abuse
Anandanபணமதிப்பிழப்பு ஒரு சொதப்பல், GST இன்னொரு சொதப்பல், படஜெட் மாபெரும் சொதப்பல். இதுதான் திறமையோ ?...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-செப்-201907:19:02 IST Report Abuse
Anandanபணமதிப்பிழப்பிற்கு பின் புது ரூபாய் நோட்டுகள் ATM வந்தது ஆனால் மக்களுக்கு பணம் விநியோகிக்க முடியவில்லை. அரசுக்கு ஏன் என்றே இரண்டு நாட்களாக தெரியவில்லை அப்புறம் அவர்கள் RBI யை கேட்டனர். நோட்டு அளவு மாறிடிச்சுனா இயந்திரத்தை காலிபரேஷன் செய்யணும்னு சொன்னதும் அதை சரிசெய்ய இன்னும் மூன்று நாட்கள். அடடா, இதுவல்லவோ திறமை, திறமைசாலிகள் செயல்கள். இதற்க்கு நீங்களெல்லாம் பாராட்டுவது மிகச்சரி. அவரவர் இயல்புக்கேற்றவாறே திறமைசாலிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X