பேச்சு நடத்த இந்தியா, பாக்.,குக்கு உதவத் தயார் : குட்டரெஸ்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
நியூயார்க்: 'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு நடத்துவதே, தற்போதைக்கு தேவையான நடவடிக்கை. இந்தியா, பாக்., கேட்டுக் கொண்டால், அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளேன்' என, ஐ.நா., பொதுச் செயலர் கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, நம் அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, சர்வதேச அமைப்புகளில், பாக்., பிரச்னையை

நியூயார்க்: 'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு நடத்துவதே, தற்போதைக்கு தேவையான நடவடிக்கை. இந்தியா, பாக்., கேட்டுக் கொண்டால், அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளேன்' என, ஐ.நா., பொதுச் செயலர் கூறியுள்ளார்.



latest tamil news



ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, நம் அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, சர்வதேச அமைப்புகளில், பாக்., பிரச்னையை எழுப்பி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விரைவில் நடக்க உள்ளது. 'இந்தக் கூட்டத்திலும், காஷ்மீர் விவகாரத்தை பேசுவோம்' என, பாக்., கூறி வருகிறது.


latest tamil news



latest tamil news



இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது: எந்த நாடாக இருந்தாலும், மனித உரிமையை மதிக்க வேண்டும். இந்தியா, பாக்., இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இரு நாடுகளும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டியது மிக அவசியம். இரு நாடுகளும் கேட்டுக் கொண்டால், அதற்கு உதவ, என்னுடைய அலுவலகம் தயராக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
20-செப்-201916:27:29 IST Report Abuse
vasan இதை ஏன் ஸ்ரீலங்கா போரில் உங்களால் செய்ய முடியவில்லை...அப்பாவி தமிழ் மக்கள் கொல்ல பட்டிருக்க மாட்டார்களே.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-செப்-201918:53:59 IST Report Abuse
தமிழவேல் நல்ல கேள்வி.....
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
20-செப்-201921:41:44 IST Report Abuse
Nallavan Nallavan@வாசன், இன்றும் ஹாங்காங் நிலவரத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லையே ??...
Rate this:
Cancel
20-செப்-201913:08:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அவனுங்க கிட்ட பேசி எந்த பயனும் இல்லை. போட்டுத்தள்ளுவதுதான் சிறந்த வழி. மூர்க்கர்களுக்கு அமைதி பேச்செல்லாம் மண்டையில் ஏறாது.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
20-செப்-201910:46:18 IST Report Abuse
BALU நியாயம் தர்மம் அறியாதவர்களெல்லாம் நாட்டாமை செய்ய நான் ரெடி என்கின்றனர்.மனிதஉரிமை பற்றிப் பேசும் நரிகளே இந்தியா பாக். பிரிவினைக்குப் பிறகு இதுவரை இந்தியாவில் சிறுபாண்மை மக்கள்தொகை விகிதம் அதிகரித்து உள்ளது. ஆனால் பாக்கிஸ்தானிலோ சிறுபாண்மை மக்களே இல்லையென கூறும் அளவிற்கு சிறுபாண்மை இந்துக்களும் சீக்கியர்களும் அழிக்கப்பட்டு வருகின்றனர். இதைப்பற்றி பேச துப்பில்லாத சமுதாயமும் ஐ.நா. வும் தண்டச் சோறு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X