வேகமாக நிரம்பும் சென்னையின் நீர்ஆதாரங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேகமாக நிரம்பும் சென்னையின் நீர்ஆதாரங்கள்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (23)
Share

சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் கனமழையால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றன.



latest tamil news



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூரில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களான முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் விரைவில் ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news



35 அடி கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. ஏரிக்கு 200 மில்லியன் கனஅடி நீர் வந்தது. தற்போது பூண்டு ஏரிக்கு 2000 கனஅடியும், புழல் ஏரிக்கு 315 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 347 கனஅடியும் நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக காய்ந்து கிடந்த மதுராந்தகம் ஏரிக்கும் நீர்வர துவங்கி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X