பொது செய்தி

இந்தியா

திருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (18)
Advertisement

திருப்பதி : 2016 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது.





பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு சட்ட விரோதமாக ரூ.131 கோடி அளவிலான பணத்தை சேகர் ரெட்டி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.30 கோடி அளவு புதிய ரூ.2000 நோட்டுக்கள் ஆகும். சட்டவிரோதமாக பணமாற்றிய விவகாரம் தொடர்பாக சிபிஐ, சேகர் ரெட்டியை கைது செய்தது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த சேகர் ரெட்டி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள், முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன ராவ் உள்ளிட்ட பலருடனும் சேகர் ரெட்டிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து ராம் மோன ராவ் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.




3 ஆண்டுகள் வழக்கு நடந்த நிலையில், ரெய்டில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் அவர் சட்டப்பூர்வமாக சம்பாதித்தது என கணக்கு காட்டப்பட்டதை அடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான் அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான குழுக்களின் தலைவராகவும் அவர் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
21-செப்-201912:28:03 IST Report Abuse
Rajavelu E. ஊழல் கறை படிந்தவர் தான் இப்போது கர்நாடகாவின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். குட்கா வழக்கில் சம்பந்த பட்டவர் தானே இங்கே அமைச்சரா இருக்காரு. இருக்கிற சட்டத்தை வைத்துக்கொண்டு, நேர்மையற்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு, நேர்மையற்ற அரசியல் வியாதிகளை வைத்துக்கொண்டு, ஒண்ணுமே செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201915:09:30 IST Report Abuse
Nepolian S என்னோட கருத்து
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-செப்-201914:27:46 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் ஊழல்வாதிகளை ஒதுக்கி புதியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அதுவரை ஊழல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X