ஹூஸ்டனில் கனமழை: 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு சிக்கல்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (16)
Advertisement

ஹூஸ்டன்: இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ள 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வரும் ஹூஸ்டன் நகரில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சி நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.





அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செப்.,22 ம் தேதி இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 50,000 க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடி இன்று (செப்.,20) இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்ல உள்ளார்.

இந்நிலையில் டெக்சாசில் கடும் புயல் காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இதனால் டெக்சாசின் பல பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்கிழக்கு டெக்சாசில் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





தென்கிழக்கு டெக்சாசிற்கு உட்பட்ட 13 நாடுகளில் அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக டெக்சாஸ் கவர்னர் கிரிக் அபோர்ட் அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக திடீரென ஏற்பட்ட புயலால் கடும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஹவுடி மோடி நிகழ்ச்சியை கவர்னர் நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-201903:50:27 IST Report Abuse
Edison Newton nobel Enge enngayo malai vellam, bugambam, flight crash, tsunami, cyclone... Varuthu..... Intha ulagam... Super.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-செப்-201920:09:07 IST Report Abuse
Ramesh Sargam "விடாது அடை மழை பெய்தாலும், விடாது மோடியின் நிகழ்ச்சி நடைபெறும்". அது உறுதி. மோடி என்றால், மழையும் விலகும், என நம்புவோம். எல்லாம் நன்மைக்கே
Rate this:
Share this comment
Cancel
Leo -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201920:08:46 IST Report Abuse
Leo விழா நடந்தே தீரும். மேடையில் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி கை காட்டும் காட்சி உலகமெங்கும். இங்க என்ன ஆனாலும் சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X