கார்ப்பரேட் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (108)
Share
Advertisement

கோவா: புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news




கோவாவில் இன்று (செப்., 20) நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு வரி சலுகைகளை அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால் இந்த சலுகைகளை அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரிகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். கார்ப்பரேட் வரி அடிப்படையில் நாம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணையாக இருக்கிறோம்.


latest tamil news


வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, 2019-20 நிதியாண்டு ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய சட்டபிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் 22 சதவீதம் என்ற விகிதத்தில் வருமான வரி செலுத்த அனுமதிக்கிறது. அவை எந்தவொரு ஊக்கத்தொகையும் விலக்குகளும் பெறாது.


latest tamil news


மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அதிக முதலீடுகளைச் செய்ய விரும்புகிறோம். இதனால் பொருளாதாரம் வலுப்பெறும். நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் மற்றொரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. இது அக்.,1க்கு பிறகு தொடங்கப்படும் எந்தவொரு புதிய உள்நாட்டு நிறுவனத்தையும் தொடங்குவதில் புதிய முதலீட்டுக்கு 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும்.


latest tamil news


ஊக்கத்தொகை அல்லது விலக்குகளைத் தொடர்ந்து பெறும் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க, அவர்களுக்கு நாங்கள் குறைந்தபட்ச மாற்று வரி (MAT) நிவாரணம் அளிக்கிறோம். தற்போதுள்ள வரி 17.01 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
20-செப்-201922:13:04 IST Report Abuse
konanki தண்டம் ஓ திருட்டு திராவிஷங்க GST கட்ட கூடாதுன்னு தான் பிரியாணி கடையிலே திருடி தின்றாங்களா?
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-செப்-201920:41:57 IST Report Abuse
தாண்டவக்கோன் V Venkatachalam & Swaroopa Mehta ங்கிற பேருங்கள்ள எழுதர்து அந்த Koodal முட்டுச்சந்து "வலையில் கீரி"தான். "டேய், கீரி, இந்தப்பொழப்புக்கு நீயி,............... போ..., போ...... "
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
20-செப்-201919:47:30 IST Report Abuse
Rajathiraja கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைச்சா கட்சிக்கு நன்கொடையை அள்ளி கொடுப்பானுவோ நம்ம ஓட்ட IT சட்டம் அந்த நன்கொடைக்கும் 100 % வருமான வரிவிலக்கும் கொடுக்கும். அங்கீகரிக்கப்பட்ட லஞ்சம் பெருகும், இதனால் எந்த பயனும் சாமானியர்களுக்கு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X