இலங்கை வீரர்களை மிரட்டுதாம் இந்தியா: அப்ரிதி அபாண்டம்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (22)
Advertisement

இஸ்லாமாபாத்: இலங்கை கிரிக்கெட் வீரர்கள், பாக்., செல்வதை தவிர்ப்பதற்கு இந்தியா தான் காரணம் எனவும், இலங்கை வீரர்களை இந்தியன் பிரிமீயர் லீக் மிரட்டுவதாகவும் பாக்., கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி குற்றம்சாட்டி உள்ளார்.





பயங்கரவாத தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக பாக்.,கிற்கு செல்ல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியமும் பாக்., இடம் உறுதிபடுத்தி விட்டது. முக்கிய வீரர்கள் பலர் பாக்., செல்ல மறுத்து விட்டதால், பாக்., பயணத்தை நிறுத்தி வைக்கும்படி இலங்கை பிரதமரும் கடந்த வாரம் அறிவுறுத்தி உள்ளார்.




ஆனால் இலங்கை வீரர்கள் பாக்., செல்லாததற்கு இந்தியன் பிரீமியர் லீக்கின் மிரட்டலை காரணம் என அப்ரிதி கூறி உள்ளார். பாக்.,க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா இவ்வாறு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் அளித்த வீடியோ பேட்டியில், கடந்த வாரம் கூட இலங்கை வீரர்களிடம் நான் பேசினேன். பாக்., வந்து, விளையாட அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இந்தியன் பிரிமீயர் லீக்கோ, நீங்கள் பாக்., சென்று விளையாடினால் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் தர மாட்டோம் என மிரட்டி உள்ளனர்.

இலங்கையை பாக்., எப்போதும் ஆதரிக்கும். பாக்., ஒருபோதும் இலங்கை பயணத்தை ரத்து செய்தது கிடையாது. இந்தியா அளிக்கும் அச்சுறுத்தலை மீறி பாக்., வரும் இலங்கை வீரர்கள், பாக்., வரலாற்றில் என்றும் நினைவு கூறப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதே கருத்தை அப்ரிதி தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201921:53:01 IST Report Abuse
sekar ng ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தானில் தாக்கியது மறக்கமுடியுமா. அங்கு பயங்கரவாதிகளுடன் விளையாட யார் வருவார்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-செப்-201919:35:35 IST Report Abuse
Nallavan Nallavan இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்ட பாக் கிரிக்கெட் வீரர் தரம்தாழ்ந்து போகிறார் .......
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-செப்-201919:28:38 IST Report Abuse
தமிழ் மைந்தன் உங்க நாட்டில் பாதுகாப்பு உள்ளது என நிருபிக்க தமிழக ஊழல்கம்பெனி இயக்குநர் ஸ்டாலின், மத போதகர் வைகோ, சாதிகட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன், ஓசி சோறு வீரமணி, சாராய அதிபர் பச்சைமுத்து, மத கட்சி முஸ்லிம்லீக் ஜவாஹிருல்லா, பாலியல் வைரமுத்து, சாதி மோதல் ஆலோசகர் திருமாவளவன், அழிவின் விளிம்பில் உள்ள கம்யூனிஸ்டுக்கு முத்தரசன், ராஜா, பல நாடுகளில் சொத்து பதுக்கும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கொண்ட அணி வந்து விளையாடும்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X