அரசியல் செய்தி

தமிழ்நாடு

அலட்சிய மரணம் கொலையே: கமல் ஆவேசம்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (57)
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்திவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் டுவீட் செய்துள்ளார்.latest tamil news


மேலும் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டுவிட்டரில் ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றையும் கமல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது :

" உலகத்தில் கொடுமையான விஷயம், வாழ வேண்டிய பிள்ளைகளின் மரண செய்தியை அவர்களின் பெற்றோர்கள் கேட்பது தான். சுபஸ்ரீயின் மரண செய்தியும் அப்படிப்பட்டது தான். தனது பெண்ணின் ரத்தம் சாலையில் சிந்திக்கிடப்பதை பார்க்கையில் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் திகிலும் பீதியும் ஏற்படும். பெண்ணை, பெண்களை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகுக்களும், சுபஸ்ரீக்களும் அரசின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


latest tamil newsகொஞ்சமாவது அறிவு வேண்டாமா? எங்கே பேனர் வைக்கனும், வைக்க கூடாது என்று கூடவா உங்களுக்கு தெரியாது. இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ. எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதும் தானே இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்சிகள் மீது எனக்கு மயிரிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.


மக்கள் நீதி மையம் உங்கள் சார்பாக கேள்விகள் கேட்டும், அதற்கான தீர்வையும் பெற்றுத் தரும். எங்களை ஆள்கிறவர்களை நாங்கள் தான் தேர்வு செய்யனும். ஆனால் நாங்கள் அடிமைகளாக தான் இருப்போம் என கூறினால் அதை விட பைத்தியக்காரத்தனம் எதுவுமே கிடையாது. உங்களை சாதாரண மக்கள்...சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே என்றும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள் தான் அசாதாரண தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் தின்னமாக உணர்கிறேன். வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம்". இவ்வாறு கமல் பேசி உள்ளார்.

தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஜார்கண்ட், மேற்குவங்கம், ஒடிசாவில் இருந்து வந்துள்ள கிராமப்புற குழந்தைகளுடன் இணைந்து மெட்ரோவில் பயணிக்க போகிறேன். அலட்சிய மரணங்களும் கொலைகளே. பேனர் விவகாரம் நடந்த இடத்திற்கு எத்தனை கட்சிகள் சென்றன. அலட்சியம் அதிகமாக கொலைகள் அதிகரிக்க செய்யும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-201922:20:37 IST Report Abuse
kulandhai Kannan எந்த உரிமையில் சினிமாகாரர்கள், கமல் உட்பட, பொதுசுவர்களில் போஸ்டர் ஒட்டுகிறார்கள்??
Rate this:
Rajas - chennai,இந்தியா
20-செப்-201923:22:16 IST Report Abuse
Rajasநகராட்சிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் போன மாதம் தான் இந்த ரோட்டை போட்டீர்கள். ஏன் அதற்குள் பொத்தல் ஏற்பட்டு விட்டது என்று இவர்கள் கேட்பார்கள். அதிகாரிகள் ஓடி போய் விடுவார்கள்....
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-செப்-201920:33:52 IST Report Abuse
தாண்டவக்கோன் V Venkatachalam & Swaroopa Mehta ங்கிற பேருங்கள்ள எழுதர்து அந்த Koodal முட்டுச்சந்து "வலையில் கீரி"தான். "டேய், கீரி, இந்தப்பொழப்புக்கு நீயி,............... போ..., போ...... "
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
20-செப்-201921:46:09 IST Report Abuse
Swaroopa Methaகோன், மற்ற ஒரு செய்தியில் ஒரு 50 வயது பெண் MP பற்றி அவதூறா கருத்து தெரிவிச்சு அவனோட IP மூலமா விசாரணை அமைப்புகள் அவன நெருங்கிட்டதாகவும் விரைவில் தூக்கப்படுவது உறுதி என்றும் தகவல் கிடைத்துள்ளது...
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
20-செப்-201921:47:34 IST Report Abuse
Swaroopa Methaகோன், என்னடா பெனாத்தல் இது..? Koodal முட்டுச்சந்து, வலையில் கீரி… தலைல அடி பட்டுருச்சா..?...
Rate this:
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
20-செப்-201920:22:01 IST Report Abuse
Kandaswamy இவரு சாதாரண குடிமகனா இருக்கும் போதே பொங்காம. கட்சி ஆரம்பிச்சி பொங்கறார். இவர்கள் தைரியம் எல்லாம் ஜெ.ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணி இருந்தபோது எங்கே போயிற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X