பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் வளர்ச்சி இம்ரானுக்கு பிடிக்காது: இந்திய தூதர்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Imran Khan, j-k, India, Us Envoy, Kashmir, Pakistan, இம்ரான், காஷ்மீர், அமெரிக்கா, இந்திய தூதர், சிறிங்களா, சையத் அக்பரூதீன், ஐக்கிய நாடுகள், ஐ.நா.,

புதுடில்லி: காஷ்மீர் மாநிலம் வளர்ச்சி பெறுவதை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்க மாட்டார் என, அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஸ்வர்தன் சிறிங்களா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டி: ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் அமைதி ஏற்படுவதை தடுக்க பாகிஸ்தான் சதி செய்கிறது. அந்த பகுதிகளில் பொருளாதார நிலை பலவீனமாக இருக்கும் போது தான், அங்கு பிரிவினைவாத செயல்களை பரப்ப முடியும் என நினைக்கிறது.
இதனால் தான், பயங்கரவாதத்தை, ஒரு அரசியல் கருவியாக, பாகிஸ்தான் பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு காரணமாக இருக்கும் நாடு, ஒசாமா பின்லாடனுக்கும் புகலிடம் கொடுத்தது. இதனால், காஷ்மீரில், பொருளாதார வளர்ச்சியை பாதித்ததுடன், பாகுபாடு காட்டிய சிறப்பு சட்டம் 370ஐ நீக்கியதை எதிர்க்கிறது.




சிறப்பு சட்டம் ரத்து மூலம், காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகியவை வளர்ச்சி பெறும். அங்கு, பாகிஸ்தான், தடம் பதிப்பது தடுக்கப்படும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடன் இணைந்து அமைதி, வளர்ச்சிக்காக பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஆனால், தனது நாட்டில் தடையின்றி பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது குறித்து அவர் சொல்லவில்லை.
வரலாற்று பிழையை திருத்தவும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறவும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.மேலும், நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தனித்து இருந்த மாநிலத்தில், சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நீதி கிடைக்கும்.இம்ரான் கானுக்கு சொந்த பொருளாதாரத்தை சீர்குலைக்க உரிமை உள்ளது. ஆனால், அண்டை நாட்டின் மாநிலத்தில் பொருளாதாரத்தை சீர்குலைக்க அவர் முயற்சி செய்வதை சர்வதேச சமூகம் எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தலை குனிய மாட்டோம்


ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பேசும் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.




இது தொடர்பாக ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையத் அக்பரூதீன் அளித்த பேட்டி: உலகளாவிய பிரச்னைகள் எவ்வாறு அணுக விரும்புகிறது என்பதை ஒவ்வொரு நாடும் தீர்மானிக்க வேண்டும் சிலர் தாழ்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு பதிலளிப்பது நமது உயர்வினை காட்டுகிறது.
கடந்த காலங்களில், பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை நாங்கள் கண்டிருக்கிறோம். அவர்கள், தற்போது, வெறுக்கத்தக்க பேச்சை பிரதானமாக கொள்ள விரும்பலாம். அது அவர்களின் முடிவு. நாம் உயருவோம் என்று நம்புகிறோம். நாங்கள் தலை குனிய மாட்டோம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை நாங்கள் உங்களுக்கு பலமுறை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201907:57:34 IST Report Abuse
மதுவந்தி இம்ரானுக்கு மட்டுமா? காஷ்மீரால் லாபம் போன சில குடும்பத்தினருக்கும் தான்.
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201921:50:21 IST Report Abuse
sekar ng எவ்வளவு வறுமை வந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிடாது. அவர்கள் ரத்தவெறியர்கள்
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-செப்-201916:25:08 IST Report Abuse
Nakkal Nadhamuni இம்ரானுக்கு மட்டுமா பிடிக்காது, இங்க இருக்கும் மோடி எதிர்பாளர்களுக்கும் பிடிக்காது.... இந்திய நாட்டின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் காஷ்மீர்ல அதிகம் இருக்கிறார்கள்... தேசதுரோகிகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X