பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து விசாரணை: அமைச்சர்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: சென்னை நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள்மாறாட்டம் நடந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக, தேசிய தேர்வு முகமை தான் பதில் சொல்ல வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. மத்திய அரசு தான் நடத்தியது. எனவே, இந்த விவகாரத்திற்கு தமிழக அரசு காரணம் அல்ல. இருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
20-செப்-201916:52:30 IST Report Abuse
Thiagarajan Kodandaraman வசூல் ராஜா மக்கள் மய்யம் தலைவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் . தவறு செய்ய தூண்டியவரும் தண்டிக்க பட வேண்டியவர்களே
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
20-செப்-201916:43:58 IST Report Abuse
S.P. Barucha நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரப்பட்ட வேலையில் கவனமின்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X