காஷ்மீர் விவகாரம்: பாக்., முயற்சி தோல்வி

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

ஜெனிவா: ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை பதிவு செய்வதற்கான இறுதி அவகாசத்தை தவறவிட்டு பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.



latest tamil news


ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலின் 42வது கூட்டம் கடந்த செப்., 9 முதல் செப்., 27 வரை நடைபெறுகிறது. காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் தரப்பில் பிரச்னை எழுப்பப்பட்டது. கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவரவும் பாக்., முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய செப்., 19 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவகாசம் நேற்றுடன் (செப்., 19) முடிவடைந்ததை அடுத்து பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை.


காரணம் என்ன

ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டுவர, குறைந்தபட்சம் 16 நாடுகளின் ஆதரவும், அந்த தீர்மானத்தில் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவும் தேவை. ஆனால் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான 16 நாடுகளின் ஆதரவு கூட இல்லாததால் பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை.


latest tamil news


சமீபத்தில் பாக்., பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்ததாகவும் பதிவிட்டிருந்தார். 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட கவுன்சிலில் 58 நாடுகளின் ஆதரவு இருப்பதாக கூறியதாக சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளானார்.
இந்நிலையில் 58 நாடுகளின் ஆதரவு இருப்பதாக கூறியும் தற்போது 16 நாடுகளின் ஆதரவை கூட பெற முடியாததால் மீண்டும் பாக்., குறித்து இணையவாசிகள் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201916:20:16 IST Report Abuse
Yaro Oruvan அடடா நம்ம சுல்த்தான் சூசைக்கு இந்த செய்தியை பார்வேர்ட் செய்ங்க.. மனுஷன் மல்லாக்க படுத்து என்னென்னமோ யோசிச்சிகினு பெனாத்திக்கிட்டு இருக்காரு...
Rate this:
Cancel
Radhakrishnan - Pune,இந்தியா
20-செப்-201922:28:04 IST Report Abuse
Radhakrishnan 58 out of 47 countries.... haha
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201921:41:01 IST Report Abuse
sekar ng பப்பு (ராஹுல்வின்சி) இம்ரானுக்கு இதற்காக நோபல் சிபாரிசு சிபாரிசு செய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X