பொது செய்தி

இந்தியா

கார்ப்பரேட் வரி குறைப்பு: தொழிலதிபர்கள் வரவேற்பு

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (45)
Advertisement
CorporateTax, FinanceMinister, கார்ப்பரேட் வரி, நிர்மலா சீதாராமன்,  கிரண் மஜூம்தார்,

புதுடில்லி: கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதற்கு, தொழிலதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் கூறியதாவது: அரசின் நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சியில் அரசு கொண்டு உறுதியையும், நேர்மையாக வரி செலுத்தும் நிறுவனங்களுக்கான அரசின் ஆதரவையும் காட்டுகிறது. கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது வளர்ச்சியை அதிகரிக்கும்.
வளர்ச்சிமற்றும் முதலீட்டை மீண்டும் அதிகரிக்க செய்வதற்கான முக்கியமான நடவடிக்கை. இந்த தைரியமான நடவடிக்கை எடுத்த நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு பாராட்டுகள். இந்த நேரத்தில் இது தேவையான ஒன்று.





இவர், தான் பொருளாதார விவகாரம் தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், டுவிட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டவர். தற்போது, வரி குறைக்கப்பட்டதற்கு, வரவேற்பு தெரிவித்துள்ளார்.




கோடக் மகிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோடக் கூறியதாவது: கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது, பெரிய சீர்திருத்தம். இதன் மூலம், இந்திய நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களுடன் போட்டி போட முடியும். பொருளாதார வளர்ச்சி மற்றும் நேர்மையாக வரி செலுத்தும் அரசின் நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவை எடுத்து காட்டுகிறது. தைரியமான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை.




மகிந்திரா மற்றும் மகிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கே கோயங்கா : தீபாவளி முன்னரே வந்துவிட்டது போல் உள்ளது . இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201900:15:35 IST Report Abuse
Pugazh V அடாபுடா என்று எழுதி மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொள்வதில் தமிழக பாஜகவினரை மிஞ்ச முடியாது. எல்லா பாஜக வாசகர்களும் வெத்துவைட்டு. ஆரோக்கியமான அறிவுபூர்வமான வாதங்கள் செய்யவே தெரியாது பாவம். நன்றி
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
20-செப்-201919:33:30 IST Report Abuse
Raj ஏற்கனவே வருவாய் போதாமை காரணத்தினால் RBI இடமிருந்து கடன் வாங்கி இருக்கும் நிதி அமைச்சர், மிக நல்ல முடிவு எடுத்துள்ளார்.
Rate this:
Share this comment
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-செப்-201919:44:41 IST Report Abuse
Janarthananரொம்ப கவலை படாதீங்க , போய் சன் டிவி பாருங்க ??...
Rate this:
Share this comment
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
20-செப்-201920:55:43 IST Report Abuse
Swaroopa Methaநீயா வட்டி கட்டப் போற...
Rate this:
Share this comment
Raj - coimbatore,இந்தியா
20-செப்-201922:30:36 IST Report Abuse
Rajசொன்னாலும் சொல்லாட்டியும் ஒவ்வொரு இந்தியா குடிமகனும் வட்டி கட்டி தான் ஆகணும்..சும்மா அந்தர் பல்டி அடிச்சு ஜனார்த்தனன் மாதிரி சன் டிவி பாத்துகிட்டு இருந்தா உங்க பேரனோட தலையை மொட்டை அடிச்சிட்டு போயிருவாங்க. அதாவது "உன் பணம் இப்போ என் பணம்" என்று கூறி. மக்களுக்கு ஒரு விஷயம் புரியணும், வரி கட்டணும்னா முதல்ல எல்லா நிறுவனமும் லாபத்தில் இயங்கணும்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-செப்-201919:32:05 IST Report Abuse
Nallavan Nallavan இந்த பிசுக்கோத்துக்குத்தானே ஆசைப்பட்டாய் மஜூம்தார் ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X