கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலம் : தமிழக அரசு கோர்ட்டில் பதில்

Added : செப் 20, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 கோவில் நிலம், தமிழக அரசு, கோர்ட்டில், பதில்

சென்னை:கோவில் நிலங்களில் 10 ஆண்டுகள் இருப்போருக்கு பட்டா வழங்கும் அரசாணையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது என தமிழக அரசு சென்னை ஐகோரட்டில் தெரிவித்துள்ளது.

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகள் மேல் குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் எனகடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இது சட்டவிரோதமாக கோயில் நிலங்களை ஆக்கிரமித்தோருக்கு உதவும் வகையில் இருப்பதாக ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.


இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது: கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாணைஇருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் கோவில் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு உள்ளது . நிலங்களை கையகப்படுத்த சட்டம் இருக்கும் போது இந்த உத்தரவு ஏன் கொண்டு வரப்பட்டது என கேள்வி எழுப்பினர். புதிய அரசாணை கோவில் சொத்துக்களை விற்க அவர்களை நிர்பந்திக்கும் வகையில் உள்ளது. என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து விரிவான பதில் மனு விரைவில் தாக்கல் செய்கிறோம் அது வரையில் அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் இல்லை என அரசு உறுதி அளித்தது. தொடர்ந்து வழக்கை செப்.,30 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
21-செப்-201900:43:54 IST Report Abuse
Subbanarasu Divakaran எத்தனையோ ஆண்டுகளாக கோயில் நிலங்களை அரசியல் வாதிகள் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறார்கள்.இடை நிறுத்த ஏன்டா திராவிட கட்சியும் ஒன்றும் செய்வதில்லை ஏனென்றால் கொள்ளைக்காரர்கள் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201900:23:23 IST Report Abuse
ருத்ரா நிலம் அதிகரிகளுக்கு வேண்டப் பட்டவர்களுக்கு தருவதது போல் தந்து மீண்டும் தனதாக்கி கொள்ள கொள்ளை முயற்சி. மீறி கண்டுபிடித்தால் சம்மந்தப்பட்ட வர்கள் கூண்டோடு மாற்றம். வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
21-செப்-201900:19:46 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga கோவில் நிலத்தை குடியிருப்பவர்களுக்கே கொடுப்பது நியாயமே இல்லை. அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலுக்கு திருமயிலையில் அடையாறு வரை நிறைய சொத்துக்கள் உள்ளன. இவைகளை விற்று விட்டால் கோவில் பராமரிப்புக்கு வருமானம் குறையும். அரசாங்கம் இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கோவில் நிலங்களை மீட்டுஎடுத்து தகுந்த முறையில் வாடகை நிர்ணயம் செய்து வசூல் செய்திடல் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X