கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ அறிக்கை தாக்கல்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்த போது,சிபிஐ இயக்குநர் சார்பாக, சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை குறித்தும், போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீல் வைக்கப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கை கோர்ட் பார்வைக்கு மட்டும் என சிபிஐ சார்பில் கூறப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை, ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.




பரிந்துரை


இதன் இடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆணையம், ''தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 428 பேர் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட நபர்களில் 80 சதவீதம் பேர் 18 வயதில் இருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள். எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் '' என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
20-செப்-201922:29:22 IST Report Abuse
Tamil தமிழ்நாடு போலீஸ் பெயர் நாசமாக போனது இரண்டு சம்பவங்கள், ஒன்று ஜல்லிக்கட்டு மற்றொன்று தூத்துக்குடி ஸ்டெர்லிட் ஆலை துப்பாக்கிசூடு. அப்பாவிகளை அடித்து சுட்டு கொன்றது இந்த இரு தமிழ்நாடு போலீஸ் ஒரு கரும்புள்ளி. ஜல்லிக்கட்டில் மாணவர்கள் மீது கண்மூடி தனமாக செய்யச்சொன்னவர்கள் கோபுரத்தில் இருந்து குப்பைமேடுக்கு வந்து அதிகாரத்தை இழந்து அதற்கான தண்டனை அனுபவிக்கிறார்கள் அது போல தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிப்பார்கள். ஜல்லிக்கட்டு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் நிராயுதபாணியாக இருந்த மக்களை சுட்டுக்கொன்றவர்கள் எதிராக சாட்சி சொல்லுபவர்கள் இல்லாத நிலை வரும்வரை விசாரணை இழுத்து கொண்டு இருக்கும். தற்பொழுது அதிகாரத்தில் இருக்கும் டிஜிபி மற்றும் COMMISONER போன்ற சில நல்லவர்கள் உயர் பதவியில் இருக்கும்வரை மக்களுக்கு நல்லது நடக்கும். ஜல்லிக்கட்டு மற்றும் தூத்துக்குடி இது போன்ற அராஜகம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X