பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் சர்வதேச அருங்காட்சியகம் :ஸ்டாலின்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
கீழடி, சர்வதேச, அருங்காட்சியகம் ,ஸ்டாலின்

சென்னை: கீழடியில் சர்வதசே அளவிலான அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். கி.மு., 6 ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது வரலாற்று சான்றுகள் வெளியாகி உள்ளன.
கீழடி அகழாய்வு நடைபெறும் இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும். கீழடி அருகே கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கதக்கது.
கீழடி ஆய்விற்கு பின்னர் உ.பி.,யில் சானோவ்லி என்ற இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வாட் நகரில் அறிவித்ததை போன்று தமிழகத்தில் கீழடியிலும் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப் பட வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தந்து கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கீழடி அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் துறை செயலாளர் உதய சந்திரன், கீழடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய எம்.பி., வெங்கடேசன் ஆகியோருக்கு தி.மு.க., சார்பில் வாழ்த்துக்கள்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
20-செப்-201921:04:59 IST Report Abuse
chinnamanibalan கீழடியில் கிடைத்த கருப்பு சிவப்பு நிற மண் பண்டங்களைப் பார்த்து, சங்க காலம் தொட்டு தமிழன் திமுகவின் இருவர்ணக் கொடியை மட்பாண்டங்களில் வரைந்து பயன்படுத்தி வந்தான் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன எனக் கூறாமல் விட்டது வரைக்கும் மகிழ்ச்சியே.
Rate this:
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
21-செப்-201905:06:08 IST Report Abuse
Palanisamy Tஸ்டாளின் அவர்கள் சொன்னது என்ன, நாம் சொல்வது என்ன எல்லோருக்கும் பயன்படுபடியான நல்ல நாகரீகமான கருத்துக்கள் மூலமாகத்தான் நாம் நாளை நல்ல சமுதாயத்தை உருவாக்கமுடியும். அந்த நல்ல கலாச்சராத்தை வளர்ப்போம்....
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
20-செப்-201920:09:13 IST Report Abuse
M.COM.N.K.K. வாழ்த்து சொன்ன திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-செப்-201919:32:37 IST Report Abuse
தமிழ் மைந்தன் உங்க அப்பாவின் சிலையை வைக்க சொல்லவா? எங்களை நாங்க பார்த்துக்கொள்வோம்.....உங்க தெலுங்கு நாயுடுவை கரை சேர்க்க உதவி செய்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X