பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா பேனருக்கு பதிலாக ஹெல்மெட்:நடிகர் சூர்யா ரசிகர்கள்

Added : செப் 20, 2019
Advertisement
சினிமா, பேனர், ஹெல்மெட், நடிகர் சூர்யா, ரசிகர்கள்

திருநெல்வேலி: சினிமா கட்அவுட், பேனர் வைப்பதற்கு பதிலாக 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியை போலீஸ் துணைகமிஷனர் சரவணன் துவக்கிவைத்தார்.

சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட அரசியல் கட்சி பேனர் ரோட்டில் விழுந்ததில், இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவத்திற்கு பிறகுஅரசியல் கட்சியினரும், சினிமா நடிகர்களும் பேனர்கள் வைக்கமாட்டோம் என தெரிவித்தனர். சினிமா தியேட்டர்களில் கட்அவுட், பேனர்கள் வைப்பதற்கு வைப்பதற்கு பதிலாக ரசிகர் மன்றத்தினர் ஹெல்மெட் வழங்கினால் விழிப்புணர்வாக இருக்கும் என போலீஸ் துணைகமிஷனர் சரவணன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

நடிகர் சூர்யா நடித்துள்ள ‛‛காப்பான்‛‛ திரைப்படம் வெளியானது.துணைகமிஷனரின் கோரிக்கையை ஏற்ற நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் தியேட்டரில் பேனர்கள் வைப்பதற்கு பதிலாக, 200 நபர்களுக்கு ஹெல்மெட் வழங்கினர். அதனை துணைகமிஷனர் சரவணன் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X