பொது செய்தி

இந்தியா

என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
பரவசப்படுத்தியபெண் எம்.பி.க்கள  நடனம்

கோல்கட்டா : மேற்கவங்கத்தில் துர்கா பூஜை பண்டிகையையொட்டி அம்மாநில முதல்வர் மம்தா கட்சியை சேர்ந்த இரு பெண் எம்.பி.க்களின் அசத்தலான நடன நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் நவராத்திரியைப் போன்று மேற்குவங்கத்தில் ஆண்டு தோறும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது. ஒரு வாரம் நடைபெறும் இப்பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாட அம்மாநில மக்கள் தயாராகி வருகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில் பிரபல நிறுவனம் , துர்கை அம்மனுக்கு வணக்கம் செலுத்தும் பக்தி பாடலை உருவாக்கி பாடலுக்கு மேற்குவங்க நடிகைகளும், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரபர்த்தி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நடன நிகழ்ச்சியில் இரு பெண் எம்.பி.க்களும் நளினத்துடனும், அபிநயத்துடனும் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நடனத்தை பார்த்து பரவசமடைந்து ‛லைக்' செய்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
24-செப்-201910:44:27 IST Report Abuse
ganapati sb அருமை அரபிக்கடலோர மும்பைக்கு விநாயக் சதுர்த்தி என்றால் வங்க கடலோர கொல்கத்தாவிற்கு துர்காபூஜா அதுவே இந்துமஹாசமுத்திரம் அருகே தமிழகத்தில் ஸ்கந்த ஷஷ்டி கேரளத்தில் திருவோணம் பாரதம் ஆனந்தமான திருவிழா தேசம்
Rate this:
Cancel
21-செப்-201907:53:46 IST Report Abuse
ருத்ரா சர்ச்சைக்கு உரிய பேச்சு பேசுவதற்கு இது better. இதுவும் மக்களுக்கான சேவை என்று நினைக்கிறார்கள் போலும்!
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-செப்-201905:30:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni நான் பிறந்த நகரம் கல்கத்தா தமிழகத்திலே தான் இவ்ளோ சாதிகள் சாதிக்கெல்லாம் ஒரு காட்ச்சியும் இருக்கு என்பது தெரிஞ்சுது , சத்தியமா எனக்கு ரெண்டு சாதிகளேதான் தெரியும். சாதிகள் பெயரை சொல்லி திட்டுவதையும் கேட்டு மனதுக்கு வருத்தமாச்சு .என்னைப்பொறுத்தவரை வெஜிடேரியன் அண்ட் நான்வெஜிடேரியன்ஸ் தான்.வங்கத்துலே மீன் சாப்பிடாதவா கிடையாது வங்காளிகள் மெயின் உணவு என்று தெரியும் மீன் முட்டை கூட அவ்ளோ என்னத்துக்கு நான் எல்லாம் விரதகாலம்களிலே வெங்காயம் கூட சேர்க்கமாட்டோம் பூண்டு தொட்டதே இல்லே ஆனால் இப்போது (ஹெல்த்துக்கு வேண்டி எப்போவாச்சும் சேர்க்கிறேன்) நான் வெஜ் ஹோட்டல்களும் போகமாட்டோம் இன்னிவரை சிலசமயம் வெளிநாடுகளில் சுற்றிப்பார்க்கப்போனால் உணவுதான் பிக் ப்ராப்லம் நான் வெஜ் ஹோடேல்களேதான் ஊர் சுற்றும்போது குஜராத்தி ஹோட்டல் பார்த்தால் அங்கே போயிடுவோம் ஜெயின் போவ்ட் என்றால் நோ வெங்காயம் பூண்டு உணவும் கிட்டும் .பிரெண்ட்ஸ் கூட டேராடூன் முசௌரி ரிஷிகேஷ் சென்றேன் அன்று ஆஷாட ஏகாதசி எந்த ஹோட்டலிலும் சமைச்ச உணவு கிடைக்கலே வெறும் வாழைப்பழம் வாங்கி தின்னுட்டு வந்தோம் எங்க பஸ்லே வந்த பல ஆபிரிக்க டூரிஸ்டுகள் பத்துபேர் ரொம்பவே தவிச்சாங்க பிரெட் கூட கிடைக்கலே பாவமா இருந்துது 1980 லெபோனோம் அவாளும் பலங்களேதான் தின்னா , என்னிடம் பேசிய ஒருலெடி மேடம் உங்களுக்குபசிக்கலியா நான் நாங்கள் சுத்த சைவம் வெளியே சாப்பிடமாட்டேன் என்றேன் அவள் உடன்வந்த ஒரு பெண் MAAM WE ARE PURE நான் வெஜ் என்றால் எல்லோரும் சிரிச்சுட்டோம் இரவு வரை உபவாசம் தான் பாவம் அவாளுக்கு எது பழக்கமோ அதுதானே என்று தான் எண்ணிண்டேன் . நான் எப்போதுமே ஏகாதசிக்கு விரதம் தான் நோ கவலை மற்றவர்கள் தான் தவிச்சாங்க தண்ணீரே குடிச்சுண்டுவந்தாங்க , மீரட் வந்ததும் ஒரு ஹோட்டல் லல்ல நிறுத்த எல்லோரும் இறங்கி ஓடினாங்க அவ்ளோபசி .நான் மீண்டம் ரெண்டுவாழைப்பழம் தின்னேன் .வெளிநாடுகளில் சுற்றுலாபோனால் என் பெட்டில் எப்போதும் இருக்கு புளியத்ரீ மிக்ஸ் பார்ப்புப்பொடி தனியா போடி கேட்ச் சாரி எங்கியோ போயிட்டேன் வங்கத்துலே நெறயவருசம் இருந்ததால் அவர் கள் திருவிழா அண்ட் நடம் ரொம்பவே ரம்மியமாக இருக்கும்
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-செப்-201909:51:09 IST Report Abuse
கல்யாணராமன் சு.ரொம்ப இன்டெரெஸ்டிங்கா விஷயம் சொல்லுகிறீர்கள் ........ (நீங்கள் சொன்ன மாதிரியே) செய்திக்கு தொடர்பு இல்லையென்றாலும் ..............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X