சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் துன்புறுத்தல் 4 இளைஞர்கள் கைது

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 பாலியல் துன்புறுத்தல்4 இளைஞர்கள் கைது

விளாத்திகுளம் அருகே இளம்பெண்னை பாலியல் துன்புறுத்தல் செய்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சூரன்குடி அருகே வடக்குசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (19) இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் உணவு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அங்கு வேலை பார்த்த விளாத்திகுளம் காமராஜ் நகரை சேர்ந்த இளம்பெண்னுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கும் அப்பெண்னுக்கும் தொடர்பு நீடித்துள்ளது. இதனிடையே வியாழக்கிழமை மாலை சுரேஷ்குமார் வேம்பார் கடற்கரைக்கு செல்வதாக கூறி அப்பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

செல்லும் வழியில் விளாத்திகுளம் வேம்பார் நெடுஞ்சாலையில் காட்டுப்பகுதியில் பைக்கை நிறுத்தி தனது நண்பர்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் சுரேஷ்குமாரின் நண்பர்கள் வடக்கு செவலை சேர்ந்த ராமலிங்கம் (21). அழகுராஜ்(19) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(22) ஆகியோர் வந்துள்ளனர்.

அப்போது அப்பெண்னுக்கும் சுரேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்படவே நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதில் அப்பெண் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து நான்குபேரும் தப்பியோடிவிட்டனர். அப்பகுதியில் ஆடுமாடு மேய்த்துகொண்டிருந்தவர்கள் இளம்பெண் மயக்கமடைந்து கிடப்பது கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்த நிலையில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரனை நடத்தினர். விசாரனையில் நான்கு இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி விசாரனை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுரேஷ்குமார், ராமலிங்கம், அழகுராஜ், ராமச்சந்திரன் ஆகிய நான்கு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதி குமார சரவணன் முன்பு ஆஜர்படுத்தி 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
24-செப்-201909:32:48 IST Report Abuse
Thalaivar Rasigan வீட்டில் பெரியவர்கள் கண்டுபிடித்து வேண்டாம் என சொன்னாலும், மீறி அவர் நல்லவர் என்று போன அந்த பெண் நல்லவளா? படித்தோமா - நல்ல வேலைக்கு போய் சொந்த காலில் நின்று பெற்றவர்களை பார்த்து கொண்டோமா - நல்ல வரன் வந்தால் கல்யாணம் செய்தோமா என்று இருக்காமல், தனக்கு எல்லாம் தெரியும் என்று திமிர் எடுத்து திரிந்தால் இப்படித்தான் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-செப்-201904:53:13 IST Report Abuse
 nicolethomson என்னங்க நடக்குது இங்கே
Rate this:
Share this comment
Cancel
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
22-செப்-201915:08:28 IST Report Abuse
Veluvenkatesh கமுக்கமா கட்டு பண்ணிடுங்கோ, வேலை முடிஞ்சது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X