கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆள்மாறாட்டம் செய்த உதித்சூர்யா முன்ஜாமின் கேட்டு மனு

Added : செப் 20, 2019 | கருத்துகள் (8)
Advertisement

மதுரை: 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர் உதித்சூர்யா முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வெளியாகும் தகவல் தவறானவை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, முறையான சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னரே, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இணைந்தேன். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், என்னால், கல்லூரியில் படிக்க இயலவில்லை. என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. இவ்வாறு அந்த முன்ஜாமின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
21-செப்-201913:13:24 IST Report Abuse
Needhiyin Pakkam Nil உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படிக்க முடியவில்லை, எந்த மருத்துவமனையில் இருக்க ராஜா, நாங்க உலகம் பூராவும் உன்னைய தேடி கொண்டிருக்கிறோம், கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவன் அவன் உண்மையான உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து துணிந்து நிற்பான், இப்படி பயந்து தலைமறைவாக மாட்டான், +2 புகைப்படமும் கல்லூரியில் சேர்ந்த புகைப்படமும் ஒத்து போகிறது ஆனால் நீட் தேர்வு எழுதிய புகை படம் மட்டும் ஒத்து போகவில்லை அது எப்படி, கோச்சிங் மையத்தின் மூலம் ஆள் வைத்து தான் நீட் தேர்வு எழுதி இருக்கிறான் என்று தோன்றுகிறது, அப்பனும் தலைமறைவு மகனும் தலைமறைவு, இந்த லட்சணத்துல முன் ஜாமீன் ஒரு கேடா, நீதிபதி என்ன சொல்ல போகிறார், இந்த மாணவனை இதுவரை கைது செய்ய காவல்துறையால் முடியவில்லை என்றால், அப்புறம் இந்த காவல்துறையால் நமக்கு என்ன பயன், முன் ஜாமீன் போட்ட அந்த வக்கீலை உள்ளே போட்டு உதைத்தால் மாணவனின் இடத்தை கண்டுபிடித்து விடலாம், புகார் செய்தவர் போலியானவராம் அவரை பிடிக்க சைபர்கிரைம் உதவி நாடப்பட்டுள்ளதாம், தப்பு செய்தவனை பிடிக்க வக்கில்லை, புகார் செய்தது யாராக இருந்தால் நமக்கென்ன அந்த புகாரில் உண்மை உள்ளதா அது தான் நமக்கு முக்கியம், இந்த வழக்கில் அதிகார வர்கம் விளையாடுகிறது, வழக்கம் போல் சிறிது நாட்கள் கழித்து இந்த வழக்கும் புஷ்வானம் தான்.............
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-செப்-201910:53:19 IST Report Abuse
Chowkidar NandaIndia உத்தமன் என்றால் ஏன் ஓடி ஒளிய வேண்டும், அப்பனும் மகனும் ஏன் தலைமறைவாக வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Prakash - tamilnadu,இந்தியா
21-செப்-201909:17:13 IST Report Abuse
Prakash இவன் படிக்கும்போதே இப்படி ஏமாற்று வேலை செய்கிறான். படித்து முடித்துவிட்டால் என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது??? இவன் மேல் குற்றம் நிரூபிக்க பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம்..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X