குறைவாக எடை போடாதீர்கள்

Added : செப் 20, 2019
Advertisement
 குறைவாக எடை போடாதீர்கள்

குறைவாக எடை போடாதீர்கள்
இந்திய தலைமை குறித்து, பாகிஸ்தான் எப்போதுமே, மிக சாதாரணமாக எடை போட்டு வந்துள்ளது. 1965 போரின் போது, லால் பகதுார் சாஸ்திரியை, அவர்கள் மிக குறைவாகவே எடை போட்டனர். பாலகோட் தாக்குதலையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை. நம் படைகளின் திறமை பற்றி, அவர்கள் நன்கு அறிவர். ஆனால், நம் தலைமை, அவ்வளவு சீக்கிரத்தில் தாக்குதல் நடத்தாது என்றே அவர்கள் எப்போதும் நினைக்கின்றனர்.பிரேந்தர் சிங் தனோவாஇந்திய விமானப்படை தலைமை தளபதி

பிரச்னைகளை சந்திப்பீர்

பீஹாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், 200க்கும் அதிகமான இடங்களை, தே.ஜ., கூட்டணி கைப்பற்றும். பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இடையிலான உறவு, ஆரோக்கியமாகவே உள்ளது. எங்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த நினைப்பவர்கள், பிரச்னைகளை சந்திக்கப் போவது நிச்சயம். அவர்களுக்கு தேவையின்றி, பதில் கூறி, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என, கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.நிதிஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
கருத்து வேறுபாடு இல்லை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதி மீது, அந்நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. தங்களுக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில், ஒரு பகுதியை அவர்கள் சீனாவிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசுடன் எனக்கு, தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்ட விதத்தில், அரசியலமைப்பின் ஆன்மா நசுக்கப்பட்டுஉள்ளது. அதில் தான்,அரசுடன் முரண்படுகிறேன்.சசி தரூர்லோக்சபா, எம்.பி., காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X