பாலியல் சீண்டல் பாதிரியார் மீது வழக்கு

Added : செப் 20, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

கொச்சி: கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த, 70 வயது பாதிரியார், மூன்று சிறுமியரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து, அவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள, சென்டமங்கலம் என்ற இடத்தில், சிரிய மலபார் தேவாலயம் உள்ளது. இதில், ஜார்ஜ் படயட்டி, 70, என்பவர், பாதிரியாராக உள்ளார்.அவரிடம் ஆசி பெறுவதற்காக, 9 வயதான மூன்று சிறுமியர், கடந்த மாதம், தேவாலயத்துக்கு வந்தனர்.
அவர்களிடம், பாதிரி ஜார்ஜ், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஜார்ஜ் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, எர்ணாகுளம் அங்கமாலி திருச்சபையில் இருந்து, பாதிரி ஜார்ஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - melbourne,ஆஸ்திரேலியா
21-செப்-201913:19:45 IST Report Abuse
sathish கெட்டது போ , கேரளாவில் பிரணாயோ யாரோ ஆட்சி செய்தா என்ன ,? விஷயம் பாதிரியார் செஞ்சாருன்னு சொன்னா என்ன ??
Rate this:
Cancel
kannan - Madurai,இந்தியா
21-செப்-201911:49:37 IST Report Abuse
kannan ஒரு சர்ச் பாதர், பாவமன்னிப்பு தருவது ஒரு குற்றமா? இதுக்குலாம் ஒரு வழக்கா ? இது காவிகளின் சதி.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-201906:31:26 IST Report Abuse
 Muruga Vel ஆசாராம் பாப்புவின் ஒன்று விட்ட சகோதரர் போல இருக்கு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X