முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் கைது! :  பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் அதிரடி

Updated : செப் 22, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
  முன்னாள், மத்திய அமைச்சர்,சுவாமி சின்மயானந்த்,கைது! :  பாலியல்,பலாத்கார,வழக்கில்,போலீசார்,அதிரடி

ஷாஜகான்பூர்,: சட்டக் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., பிரமுகருமான, சுவாமி சின்மயானந்த், 72, நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர், சுவாமி சின்மயானந்த். பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில், உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். இவர், உ.பி.,யில், பல் வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இவர் நடத்தி வரும் சட்டக் கல்லுாரியில் பயின்று வந்த மாணவி, சில மாதங்களுக்கு முன், சுவாமி சின்மயானந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.


'பென் டிரைவ்

'

அவர், தன்னை, ஒரு ஆண்டாக, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதை வெளியில் கூறினால், உயிருக்கு ஆபத்து நேரிடும் என மிரட்டியதாகவும், அந்த மாணவி கூறினார். இது குறித்து புகார் அளித்தும், உ.பி., போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு, சின்மயானந்த் மீது, மென்மையான போக்கை கையாளுவதாகவும், அந்த மாணவி கூறினார்.

இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, உச்ச நீதி மன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டது. உச்ச நீதிமன்றத் தின் உத்தரவின்படி, இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.இதற்கிடையே, 'சின்மயானந்தை கைது செய்யா விட்டால் தீக்குளிப்பேன்' என, அந்த மாணவி கூறினார். சின்மயானந்தின் நடவடிக்கை தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒன்றையும், சிறப்பு விசாரணை குழுவிடம், அந்த மாணவி கொடுத்தார்.


ஆயுர்வேத சிகிச்சைஇதில், 40க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாகவும், இதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும், சிறப்பு விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், சுவாமி சின்மயானந்தை, ஷாஜகான்பூரில் உள்ள, 'திவ்ய தர்ஷன்' என பெயரிடப் பட்ட அவரது வீட்டில், நேற்று காலை, சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக கைது செய்தனர்.

அவர் மீது, பாலியல் பலாத்காரம், பெண்ணை பின் தொடர்தல், மிரட்டுதல், சட்டவிரோதமாக சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து அவர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின், அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையொட்டி, நீதிமன்ற வளாகத்திலும், மருத்துவமனையிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. சுவாமி சின்மயானந்தின் வழக்கறிஞர் கூறியதாவது:சின்மயானந்திற்கு, கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லை. ஷாஜகான்பூரில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் வீடு திரும்பிய அவருக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


பிரியங்கா கண்டனம்சுவாமி சின்மயானந்த் கைது குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கூறியதாவது: சட்டக் கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்யும்படி, பல தரப்பினரும், தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், உ.பி., மாநில, பா.ஜ., அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. பாதிக்கப்பட்ட மாணவியே, தீக்குளிக்கப் போவதாக கூறியதை அடுத்து, தற்போது, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர் முயற்சி காரணமாகவே, இது சாத்தியமாகியுள்ளது. 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்பதை, வெறும் கோஷமாக மட்டும் வைத்திருக்காமல், உண்மையிலேயே அதை செயல்படுத்த வேண்டும் என்பதை, அரசுக்கு, மக்கள் உணர்த்தியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
21-செப்-201918:05:37 IST Report Abuse
K.Sugavanam கல்விதந்தையா?
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-201917:51:53 IST Report Abuse
RM BJP still have not taken any action against BJP members involved in Eight year old asifa rape and muder case.They can make chief ministers ,who has experience in viewing porno during assembly session.How can we expect speed action against this CM? Swatcha Bharat! Clean India!
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201911:59:38 IST Report Abuse
Pugazh V பா.ஜ. கட்சி இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக வாசகர்கள் இப்போது வந்து...."அந்த மதத்தில் அவன் யோக்கியமா...இந்த மதத்தில் இவன் யோக்கியமா... அந்த பெண் காங்கிரஸ்...கைது செய்த அதிகாரிகள் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள்.." இவற்றில் எதாவது ஒன்றை காரணமாக எழுதுவார்கள். நடுவுல மானேதேனே போடற மாதிரி, "சுடலை..பப்பு.. ப.சி...பாகிஸ்தான்.. இத்தாலி.." என்று ஏதாவது போட்டு கொள்வார்கள்
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
22-செப்-201911:01:16 IST Report Abuse
Yaro Oruvanஹா ஹா புகலு: ஒங்க கையாலேயே சொடலைன்னு எழுத வச்சாச்சு.. அத கொஞ்சம் செல்லமா சுருக்கி சுல்தான் சூசை சொடலை நிதின்னு எழுதுங்க.. பாஸ் யாரும் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.. நியூஸ் வந்த அன்னைக்கே நான் எழுதுன கமெண்ட் " பேசாம விவேக்கை கூப்டு மைனர் குஞ்சுக்கு கொடுத்த தண்டனையை கொடுத்து அவனை வெளியில பத்தி விட்ருங்க".. கண்ண மூடிக்கிட்டு கழக தொண்டர் மாதிரி காசுக்கு கூவ மாட்டோம்ப்பா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X