ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டை அணுக முடியவில்லையா?: சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Updated : செப் 22, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (11)
Advertisement
சுப்ரீம் கோர்ட், மறுப்பு,காஷ்மீர் ,ஐகோர்ட்டை, பதற்றமான சூழல்

புதுடில்லி,:'ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை, மக்களால் அணுக முடியவில்லை என கூறப்பட்ட தகவலை, காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே மறுத்துள்ளார்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு, கடந்த மாதம் ரத்து செய்யப் பட்டது. இதையடுத்து, வன்முறை ஏற்படாமல் இருக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சில உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.


சட்டப்பிரிவு ரத்துபல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இணைய சேவை துண்டிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், பெரும்பாலான இடங்களில் தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில்,பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது:

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, குழந்தைகள் பலர், சட்டவிரோதமாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த பிரச்னையை கூறுவதற்கு, காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை, மக்களால் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அதில்கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டதாவது:

மக்களால், நீதிமன்றத்தை அணுக முடியவில்லை என்பது, மிக மிக முக்கியமான பிரச்னை. தேவைப்பட்டால், இது குறித்து ஆய்வு செய்வதற்காக, நானே, ஸ்ரீநகர் செல்வேன். ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் பேசுவேன். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஜம்மு - காஷ்மீர்தலைமை நீதிபதிக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கை, நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


சிறார் நீதிக்குழுஇதன்பின், நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அளித்து உள்ள அறிக்கையில், நீங்கள் கூறும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போல எந்த தகவலும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ஏற்கிறோம்.

இது தொடர்பாக, காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் சிறார் நீதிக்குழு விரிவான விசாரணை நடத்தி, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கிடையே, காஷ்மீரில், ஐந்து பேர், சட்ட விரோதமாக சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, காஷ்மீர் நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


தொடரும் தடைஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று, சில இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஸ்ரீநகரின் பல இடங்களில், 47வது நாளாக, நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பதற்றமான இடங் களில், பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் வன்முறை வெடிக்கலாம் என தகவல் வந்ததால், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-செப்-201910:36:32 IST Report Abuse
vbs manian ஜனநாயகத்தின் உச்ச அமைப்பான பார்லிமென்ட் ஒப்புதல் பெற்றே காஷ்மீர் முடிவுகள் அமல் ஆயின. நீதிமன்றம் பார்லிமென்டுக்கு மேலானதா.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
21-செப்-201909:17:15 IST Report Abuse
 N.Purushothaman உச்ச நீதிமன்றம் 370 மற்றும் 35A சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டால் இப்படித்தான் வர்றவன் போறவன் எல்லாம் வழக்கு மேல வழக்கு போடுவான் ....சட்ட பிரிவு ரத்துக்கு எதிரான மனுவை விசாரணைக்கு உகந்தது அல்ல என்று ஆரம்ப கட்டத்திலேயே அதை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்பது தலைமை நீதிபதிக்கே வெளிச்சம் ....
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
21-செப்-201910:31:23 IST Report Abuse
Anandஉண்மை. 370 மற்றும் 35A சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யாமல் உச்சநீதிமன்றம் ஏன் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது என தெரியவில்லை, காஷ்மீரிகள் ஒத்துக்கிட்டாலும், எதிர்க்கட்சிகள் போல உச்சநீதிமன்றமும் இப்படி குறுக்கு சால் ஓட்டுவதால் எதிரிகளுக்கு மேலும் வலு சேர்ப்பது போல் ஆகிவிடும்....
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
21-செப்-201908:27:24 IST Report Abuse
ramanathan சிறார்கள் கல் எறிவதில் இருந்து தப்பிப்பதற்க்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே காஷ்மீர் செல்ல இருந்ததை கைவிட்டு விட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X