இன்று வகுப்பெடுக்கிறார் அமித்ஷா பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பு

Updated : செப் 21, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (19)
Advertisement
 இன்று,வகுப்பெடுக்கிறார்,அமித்ஷா, பா.ஜ., நிர்வாகிகள்,பரபரப்பு

பா.ஜ., தலைவர் அமித் ஷா, மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, மாநில நிர்வாகிகளிடம், பல்வேறு கேள்விகளையும் விளக்கங்களையும், இன்று கேட்க உள்ளதால், அக்கட்சி வட்டாரங்களில், பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு, மத்திய அரசு தீவிர ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.இதற்காக, அரசின் சார்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு அமைச்ச கங்களுக்கு, அறிவுறுத்தல்கள் சென்றபடி உள்ளன.


பாதயாத்திரை



கட்சி சார்பிலும், காந்தியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும், தத்தமது தொகுதிகளில், பாதயாத்திரை செல்ல வேண்டும்; மக்களை சந்தித்து, அவர்களிடம் காந்தியின் சிந்தனைகள் குறித்து உரையாட வேண்டுமென, பா.ஜ., தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என அனைவருடனும், பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உரையாட இருக்கிறார்.டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்திலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, அமித் ஷா, இந்த உரையாடலை நிகழ்த்த உள்ளார்.இதற்கான ஏற்பாடு களை செய்யும்படி, அனைத்து மாநில, பா.ஜ., தலைமைக்கும், ஏற்கனவே உத்தரவிடப்பட்டு விட்டது.

அதன்படி, மாநில தலைமை அலுவலகத்தில், அனைவரும் ஆஜராகி, அமித் ஷா பேசும் உரை முழுவதையும் கேட்க வேண்டும்; பின், அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, உரிய பதிலை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.காந்தியின் சிந்தனைகள் குறித்த வகுப்புகளை, ஒவ்வொரு லோக்சபா தொகுதியில் நிகழ்த்தவும், அவரது பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும், அமித் ஷா, சில வழிகாட்டுதல்களை வழங்குவார் என தெரிகிறது.


எதிர்பார்ப்பு



துாய்மை இந்தியா, பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரசாரம், மரங்கள் நடுதல் ஆகியவை குறித்தும், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுதல் குறித்தும், கட்சியினர் மேற்கொண்ட பணிகள், நடவடிக்கைகள் பற்றியும், அமித் ஷா விளக்கம் கேட்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, ஒரு கண்டிப்பான ஆசிரியரைப்போல, அமித் ஷா வகுப்பெடுக்க வுள்ளதால், அனைத்து மாநில, பா.ஜ., நிர்வாகிகளிடமும் மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-201918:37:11 IST Report Abuse
தமிழ்வேல் தலைப்பைப் பார்த்து, யோகா வகுப்புதான் எடுக்கப்போறாரோன்னு நினைச்சுட்டேன்.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
21-செப்-201917:30:05 IST Report Abuse
தங்கை ராஜா ஓ...... இது தான் கலிகாலமா. .....பக்தால்ஸ்லாம் கோட்ஸே காலதாமதம் செய்து விட்டதாக வருத்தப் படறத நிறுத்தலியே.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
21-செப்-201915:52:48 IST Report Abuse
PANDA PANDI நாசமாபோச்சு. ZOMBIA மாதிரி. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X