திரிணமுல் எம்.பி., வீட்டில் 32 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

Added : செப் 20, 2019
Share
Advertisement
 திரிணமுல் எம்.பி., வீட்டில்  32 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

புதுடில்லி, :திரிணமுல் காங்., கட்சி, எம்.பி.,யின் டில்லி வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 32 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7.2 லட்சம் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டன.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கே.டி.சிங், 'அல்கெமிஸ்ட்' குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்.திரிணமுல் காங்., கட்சியின், ராஜ்யசபா, எம்.பி., யாகவுள்ள இவர் மீது, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கோல்கட்டா போலீசும், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி'யும் வழக்கு பதிவு செய்தன.

இதையடுத்து, பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறையும், சிங் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இறுதியில், 'சம்மன்' அனுப்பி விசாரித்தது. இதையடுத்து, திரிணமுல் கட்சியில், சிங் ஓரங்கட்டப்பட்டார்.இந்நிலையில், பணப் பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, சிங்கின் டில்லி வீடு, அல்கெமிஸ்ட் குழும நிறுவனங்களின் பதிவு பெற்ற அலுவலகங்கள் உட்பட, 14 இடங்களில், அமலாக்கத்துறை நேற்று முன்தினம், அதிரடி சோதனை நடத்தியது.

இதில், சிங்கின் டில்லி வீட்டில், 32 லட்சம் ரூபாய் ரொக்கம், 7.2 லட்சம் ரூபாய் மதிப்புஉடைய, அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக, அமலாக் கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், 14 இடங் களில் நடத்தப்பட்ட சோதனையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X