பொது செய்தி

இந்தியா

பாலக்காட்டில் 'ரயில் பராமரிப்பு டிராக்'

Added : செப் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பாலக்காடு.: ''பாலக்காட்டிலிருந்து புதிய ரயில்கள் துவங்க வசதியாக 'ரயில் பராமரிப்பு டிராக்' அமைக்கப்படவுள்ளது,'' என, பாலக்காடு, எம்.பி., ஸ்ரீகண்டன் தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது:பாலக்காட்டில், ரயில் பராமரிப்பு டிராக் அமைக்க, கேரள மாநில, எம்.பி.,க்கள் கூட்டத் தில், ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு, ரயில்வே துறை தற்போது செவி சாய்த்துள்ளது. இத்திட்டத்தால், பாலக்காட்டிலிருந்து, திருவனந்தபுரம் உட்பட பல்வேறு ஊர்களுக்கு புதிய ரயில் சேவைகளை துவக்க முடியும். பெங்களூரு எக்ஸ்பிரஸ், கோவை உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் பாசஞ்சர் ஆகிய ரயில்களை, பாலக்காடு ரயில் நிலையம் வரை கொண்டு வர முடியும். பாலக்காடு - பொள்ளாச்சி வழித்தடத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக, புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை; அதற்கும் முயற்சிப்போம். இவ்வழித்தடத்தில், கொச்சி மற்றும் மங்களூரில்இருந்து, ராமேஸ்வரம் வரை, வாரத்தில், இரண்டு முறை, ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என, கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஸ்ரீகண்டன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
21-செப்-201907:40:36 IST Report Abuse
Loganathan Kuttuva முன்பு பாலக்காடு ராமேஸ்வரம் ரயில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கியது.அகல பாதையாக மாற்றிய பின் ராமேஸ்வரம் ரயில் இன்னமும் இயக்கப்படவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X