அடிக்காத போனுக்கு கட்டணம் கேட்பதாக புகார்

Added : செப் 20, 2019
Share
Advertisement

ஸ்ரீநகர், :ஜம்மு - காஷ்மீரில், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாதத்திற்கான கட்டணத்தை செலுத்துமாறு, பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு 'பில்' அனுப்பியுள்ளன.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம், 5ல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, அம்மாநிலம் முழுவதும், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள், முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.அங்கு, 47 நாட்களாக, சேவை வழங்கப்படாத நிலையில், அந்த காலகட்டத்திற்கான கட்டணத்தை செலுத்துமாறு, பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர் களுக்கு, 'பில்' அனுப்பி வருகின்றன.இது குறித்து புகாரளித்தும், சரியான பதில் கிடைக்கவில்லை என, வாடிக்கை யாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பள்ளிகளும் இயங்கவில்லை.

தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அவர்களை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் மறுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி மற்றும் போக்குவரத்து கட்டணங்களை செலுத்துமாறு, பெற்றோரிடம், பள்ளி நிர்வாகம் கேட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.இது குறித்து, பெற்றோர் ஒருவர் கூறுகையில், 'பள்ளி நடக்காத காலகட்டத்தில் போக்குவரத்து கட்டணத்தை ஏன் செலுத்த வேண்டும் என்பதற்கு, பள்ளி நிர்வாகத்திடம் பதில் இல்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X