பனாஜி: வெட் கிரைண்டருக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படுவதுடன், உலர்ந்த புளிக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுவதாகவும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
37 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடந்தது.இந்த கூட்டத்திற்கு பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
* வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* சமையலுக்கு பயன்படும் உலர்ந்த புளிகளுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுகிறது.

* ஓட்டல், விடுதி தினசரி வாடகை ரூ.1000 இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது.
* ரூ.1,001 ல் இருந்து ரூ.7,500 வரை வாடகை உள்ள ஓட்டல், விடுதி அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* 7.500 மேல் வாடகை உள்ள ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்த 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* உள்நாட்டில் தயாரிக்கப்படாத பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுகிறது.
* ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளி பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது.
* குளிர்பானங்கள், டீ, காபிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
*இலை, தழைகள் மற்றும் சுற்றுச்சூழல் உகந்த பொருட்களால் தயாரான கப்கள், தட்டுகளுக்கான ஜிஎஸ்டி 12 ல் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
*கப்பல்களுக்கான எரிபொருள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
*ரயில்வேக்கு சப்ளையாகும் சரக்குகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு
*10 முதல் 13 பேர் பயணிக்கும் பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 1 சதவீதமாகவும், டீசல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
*இந்தியாவில் நடக்க உள்ள 17 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டிகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைக்கும் ஜிஎஸ்டி விலக்கு
*நெசவு மற்றும் நெசவு அல்லாத பாலித்தீன் பைகளுக்கான வரி 12 சதவீதம்.
* புதிய ஜிஎஸ்டி கட்டணம் நடைமுறை அக்.,1 முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE