ரூ.6.83 லட்சம் கோடி! பெரு நிறுவன வரி குறைப்பால் திடீர் ஏற்றம்

Updated : செப் 21, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (25+ 192)
Advertisement

பனாஜி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், உள்நாட்டு பெருநிறுவனங்களின் கார்ப்பரேட் வரி விகிதங்களை, 10 சதவீதம் வரை குறைத்து, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை போல, அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரிச்சலுகையால், தேவையும், முதலீடுகளும் அதிகரித்து, ஆறு ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மையில் மாற்றம் ஏற்பட்டு, பெரும் வளர்ச்சி ஏற்படும் என, கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் மீதான கார்ப்ரேட் வரியை குறைத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். உள்நாட்டில் தொழில் தொடங்குபவர்களுக்காக அக்டோபர் 1 முதல் இந்த வரி குறைப்பு செய்யப்படுவதாக கூறினார். இதன் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் 15 சதவீதம் மட்டும் வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும். புதிய வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதம் குறைக்கப்படும். இதில் அனைத்து கூடுதல் கட்டணங்களும் அடங்கும் என நிர்மலா தெரிவித்தார்.இந்த நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய பங்கு சந்தைகளில் முதலீட்டாளர்கள், முதலீட்டு மதிப்பு, ஒரே நாளில், 6.83 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி மற்றும் வேலை வாய்ப்பின்மையை சுட்டிக்காட்டி, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.


Nirmala Sitharaman press meet

Nirmala Sitharaman press meet


வரிச் சலுகைஇந்நிலையில், பெரிய தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகளை, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். ஆசியாவில், இந்திய வர்த்தகத்துடன் போட்டியிடும், சீனா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளை எதிர்கொள்ளும் வகையில், நம் நாட்டின், உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிக்க, இந்த வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உலக சந்தையில், இந்தியாவின் வர்த்தக போட்டி அதிகரிக்கும்.இடைக்கால பட்ஜெட்மத்திய நிதியமைச்சராக, நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின், இரண்டரை மாதங்களுக்கு முன், ஜூலை 5ம் தேதி, முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பொறுப்பிலிருந்த, பியுஷ் கோயல் தாக்கல் செய்த, இடைக்கால பட்ஜெட்டை பின்பற்றிய தாகவே, இந்த பட்ஜெட் அமைந்தது. இந்நிலையில், மினி பட்ஜெட் போல, தொழில் துறையினருக்கு பெரும் சலுகை அளிக்கும் வகையில், வரிக்குறைப்பு அறிவிப்புகளை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

கடந்த, 45 ஆண்டுகளாக, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும், ஆறு ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சி நலிவுற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்புகள், உள்நாட்டு உற்பத்தி துறையில் உத்வேகத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.


குறைப்புஉள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு, இதுவரை, அதிகபட்சமாக, 34.94 சதவீதம் கார்ப்பரேட் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, அதிகபட்ச வரி விகிதம், 25.17 சதவீதமாக, வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக துவக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த, அதிகபட்ச வரிவிகிதம், 29.12 சதவீதத்தில் இருந்து, 17.01 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த வரிச்சலுகைகளால், பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலுக்கு பின், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் 4 ம் கட்ட நடவடிக்கையாக, இது அமைந்துள்ளது. பங்கு சந்தைநிதியமைச்சர் அறிவித்துள்ள வரிகுறைப்பை உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இந்த அறிவிப்பு, பங்கு சந்தைகளிலும் உடனடியாக எதிரொலித்தது.இந்திய பங்குச்சந்தைகள், காலையில் வர்த்தகம் துவங்கும் போது, சென்செக்ஸ், 100 புள்ளிகளும், நிப்டி, 23 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின.

நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின், பங்கு சந்தைகள், அதிரடியாக ஏற்றம் கண்டன. காலை, 11:30 மணியளவில், சென்செக்ஸ், 1,600 புள்ளிகளும், நிப்டி, 450 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின. நாள் முடிவில், 10 ஆண்டுகளாக இல்லாத அளவு, சென்செக்ஸ் 1,921 புள்ளிகளும், நிப்டி, 569 புள்ளிகளும் உயர்வு கண்டு, முடிவடைந்தன. முதலீட்டாளர்களின், முதலீட்டு மதிப்பு, ஒரே நாளில், 6 லட்சத்து, 82 ஆயிரத்து, 938 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, வரலாறு காணாத வகையில், பங்குசந்தை வர்த்தகம் உயர்ந்ததை, நாடு முழுவதும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

நிதி பற்றாக்குறைநிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மொத்த வருவாயில், வரிவருவாய் மட்டும், 16.5 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்தது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீதம் நிதிப்பற்றாக்குறையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.கர்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றியமைக்கப் பட்டுள்ள புதிய வரிவிகிதம் மூலம், நாட்டின் வரி வருவாயில், 1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இது, ஏற்கனவே உள்ள நிதிப்பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என கேட்ட போது, 'அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

ஏற்கனவே உள்ள நிதிப்பற்றாக்குறை, தற்போதைய வருவாய் இழப்பினால், மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும், அதனால், எதிர்மறையான விளைவுகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.பியுஷ் கோயல் பாராட்டு''வரிசலுகைகள் மூலம், உற்பத்தித்துறை முழுமையாக பயனடையும்,'' என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர், பியுஷ் கோயல் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது:தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள வரி விகிதம், அமெரிக்கா மற்றும் தெற்காசிய பொருளாதாரத்துக்கு இணையாக, நம் நாட்டையும் மாற்றியுள்ளது. புதிய கார்ப்பரேட் வரிவிகிதம் மூலம், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, 1.45 லட்சம் கோடி ரூபாயும், நேரடியாக முதலீட்டாளர்களுக்கு சென்றடையும்.அதை, அவர்கள் முழுமையாக உற்பத்திக்கு மூலதனமாக பயன்படுத்த முடியும். அதன் மூலம், பொருளாதாரம் வளர்ச்சியடையும்.இவ்வாறு, பியுஷ் கோயல் கூறினார்.


நிதியமைச்சர் நிர்மலா வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:

* செயல்பாட்டில் உள்ள உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தற்போது செலுத்தி வரும், 30 சதவீத வரிவிகிதம், 22 சதவீதமாக குறைக்கப்படும்

* நடப்பு நிதியாண்டில், அக்.,1க்கு பின், உற்பத்தித் துறையில் புதிதாக இணைந்துள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கும், வரும், 2023 மார்ச், 31க்கு முன், உற்பத்தியை துவக்க உள்ள புதிய நிறுவனங்களுக்குமான வரிவிகிதம், 25 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது

* தற்போது வரிச்சலுகை பெறும் உற்பத்தி நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரி விடுமுறை அல்லது வரி தள்ளுபடி போன்ற, சிறப்பு சலுகைகளை பெற முடியாது
* ஸ்வச் பாரத் வரி, கல்வி வரி மற்றும் கூடுதல் வரி போன்றவற்றுடன் இணைத்து, பெரு நிறுவனங்களின் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரியாக, இதுவரை, அதிகபட்சமாக, 34.94 சதவீதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, 25.17 சதவீதமாக, வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

* புதிதாக துவக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அதிகபட்ச வரிவிகிதம், 29.12 சதவீதத்தில் இருந்து, 17.01 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* இந்த புதிய வரிவிகிதங்கள், 2019, ஏப்., 1 முதல், முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும்.

* தற்போது, ஆசியாவில் உள்ள பிற நாடுகளில் இருப்பதற்கு ஏற்ப, நம் நாட்டிலிலும் கார்ப்பரேட் வரிவிகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய முதலீடுகள் அதிகரிக்கும்..

* சீனா, தென்கொரியா, இந்தோனேஷியாவில், 25 சதவீதமும், மலேஷியாவில், 24 சதவீதமும் கார்ப்பரேட் வரி விதிக்கப்படுகிறது. ஹாங்காங்கில் குறைந்தபட்சமாக, 16.5 சதவீதமும், சிங்கப்பூரில், 17 சதவீதமும் கார்ப்பரேட் வரி விகிதம் பின்பற்றப்படுகிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாமில், 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஜப்பானில் மட்டுமே, அதிக பட்சமாக, 30.6 சதவீதம் கார்ப்பரேட் வரி விதிக்கப்படுகிறது.

* தற்போதைய வரி சீர்திருத்தங்களின் மூலம், நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் அதிகரிப்பது உறுதி செய்யப்படும்

* பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், ஜூலை 5ம் தேதிக்கு முன், பங்குகளை திரும்பப் பெற அறிவித்து இருந்தால், அவற்றுக்கு வரி விதிக்கப்படாது

* ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 5 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானத்தின் மீது, 'சூப்பர் ரிச்' என்ற கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது. இந்த வரி, உற்பத்தி நிறுவனங்களின், முதலீட்டு ஆதாயங்கள் மீது விதிக்கப்படாது. எஸ்.டி.டி., எனப்படும், பங்கு பரிவரித்தனை வரி ரத்து செய்யப்படும். இதன் மூலம், மூலதன சந்தைக்கு வரும் நிதிமுதலீடுகள் உறுதி செய்யப்படும். அதே போல, எம்.ஏ.டி., எனப்படும் குறைந்த பட்ச மாற்று வரியையும், உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தவேண்டியதில்லை

* வரிச்சலுகை மண்டலத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள், வரிச்சலுகை அல்லது ஊக்க சலுகை பெறும் நிறுவனங்கள், அதை தொடர விரும்பினால், முந்தைய வரி விகிதங்களையே தொடர்ந்து பின் பற்ற வேண்டும்.இவ்வாறு, நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


பிரதமர் பாராட்டு''கார்ப்பரேட் வரி விகிதம் மாற்றம், வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. இதன் மூலம், முதலீடுகள் அதிகரிப்பதோடு, 'மேக் இன் இந்தியா' திட்டமும் ஊக்கம் பெறும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் மோடி கூறியிருப்பதாவது:காப்பரேட் வரி விகிதத்தை குறைத்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. இதன் மூலம், 'மேக் இன் இந்தியா' திட்டம் ஊக்கம் பெறும்.

உலகம் முழுவதிலிருந்தும், முதலீடுகள் ஈர்க்கப்படும். இதனால், நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர், வேலைவாய்ப்பு பெறுவர். நம்நாட்டின் தனியார் துறையில், ஆரோக்கியமான போட்டி மேம்படும். இதன் மூலம், 130 கோடி இந்தியர்களுக்கும் பயன் கிடைக்கும். அனைத்துப் பிரிவினரும் வளர்ச்சி அடைவதோடு, இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்துக்கு வழிநடத்தும் நடவடிக்கைகள், கடந்த சில வாரங்களாக வெளியாகும் அறிவிப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, மோடி கூறியுள்ளார்.


நேற்று விமர்சனம்; இன்று பாராட்டுகார்ப்பேரட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்துள்ளதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தொழிலதிபர் கிரண் மஜூம்தார் ஷா, பாராட்டு தெரிவித்துள்ளார்.'இ - சிகரெட்' விற்பனைக்கு, கடந்த, 18ல் மத்திய அரசு தடை விதித்தது. இதை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.இதை, 'பயோகான்' என்ற, முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர், கிரண் மஜும்தார் ஷா, கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரது, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், 'சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிடவேண்டிய அறிவிப்பை, நிதியமைச்சர் அறிவித்திருப்பதுஆச்சர்யம் அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் நிதி அமைச்சகம் அறிவிக்குமா' என, கூறியிருந்தார்.

இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை மத்திய நிதியமைச்சகம் நேற்று குறைத்தது. இதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி, கிரண் மஜூம்தார் ஷா, டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைந்துள்ளது, சிறந்த நடவடிக்கை. இது, நிறுவனங்களின் முதலீட்டையும், வளர்ச்சியையும் அதிகரிக்க வழிவகுக்கும்.

இந்த தைரியமான முடிவை எடுத்ததற்காக, நிதியமைச்சருக்கு பாராட்டுக்கள். பங்கு சந்தை உயர்ந்துள்ளதே, இந்த அறிவிப்புகளுக்கு கிடைத்த, உடனடி வரவேற்பு. இவ்வாறு, கிரண் மஜூம்தார் ஷா கூறியுள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (25+ 192)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-செப்-201921:09:48 IST Report Abuse
Mirthika Sathiamoorthi GDP எவ்வளவு உயர்ந்திருக்கு? அந்நிய முதலீடும், பங்கு சந்தை மட்டும் தான் பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்க பட்டிருக்கா? இனிமே, வேலைபோன எல்லோரும் மறுபடியும் வேலைக்கு போயிடலாம்? அப்போ தைரியமா நான் குடும்ப செலவுக்கு கடன் வாங்கலாம்? அப்புறம் நான் கேள்விப்பட்டேன் ஒரு புள்ளி GDP உயர்ந்த 15 லட்சம் வேலைகளும் அந்த ஒவொரு வேலையும் மறைமுகமாக 3 வேலைப்பாய் கொடுத்தா மொத்தம் 45 லட்சம் வேலைவாய்ப்பு வருமாம்? அப்புறம் விவசாயிங்க வருமானம் இரட்டிப்பாக 18 வருஷம் ஆகுமாம்...சில மாநிலங்களில் 25 வருஷம் ஆகுமாம்...ஹ்ம்ம்..இதெல்லாம் இனிமே மாறிடும் அப்பாடா நிம்மதி...அட நம்புங்க... நான் நாம்புறேன் நானும் பிஜேபிதான் .. GST ஆரம்பிச்சு 30 மாசத்துக்கு மேலாச்சு….இப்போ கொறைச்சு? GST யினால் செத்து சுண்ணாம்பானவன் மறுபடியும் பொழச்சுவருவானா? வந்துருவான் நம்புங்க.நான் நம்புறேன் நானும் பிஜேபிதான்.... இலக்கை நோக்கி ஓடும்போது கூட அணியாய் ஓடுனவனெல்லாம் செத்ததுக்கப்புறம் இலக்கை அடைந்ததில் என்ன பெருமை? இலக்குதான் முக்கியம்...நானும் பிஜேபிதான்....பணக்காரன் பெரும் பணக்காரனாகவும், ஏழை பரம ஏழையாகவும் மாற்றும் உங்கள் முயற்சிக்கு மனதார வாழ்த்துக்கள்..வாழ்த்திட்டேன் நானும் பிஜேபிதான் நம்புங்கப்பா.. …அம்பேத்கார் சொன்னது...குடியரசு ஆனா இன்றுமுதல் விசித்திரமான ஒன்றை நம் நாடு சந்திக்கபோகுது...எல்லோருக்கும் ஒட்டு எனும் அரசியல் சமன் நிலை கொடுத்தாகிவிட்டது...இது பெருமைக்குரிய ஒன்றா? சமூக சமநிலை, பொருளாதார சமநிலை ஏற்படாமல் அரசியல் சமன் நிலை ஏற்பட்டு என்ன பயன்..? இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் ஓட்டுகள் விலைக்கு வாங்கப்படும், இல்லையென்றால் மிரட்டி வாங்கப்படும்...தீர்க்கதரிசியில்லா அண்ணல் அம்பேத்கார்? இதுதான் நடக்கும் இனி.. ஓட்டை விலைக்கு விக்க எல்லோரையும் மாத்திடலாம்...இலைன்னா ஓட்டை போடாம செஞ்சு ஜெயிச்சுடலாம்...கிட்னி விக்கிற பயலுங்க ஓட்டை விக்க மாட்டாங்களா என்ன ?.அடுத்த 50 வருசத்துக்கு நம்ம ஆட்சிதான்...ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது...ஜெய்ஸ்ரீராம்...
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
21-செப்-201919:28:01 IST Report Abuse
spr "உண்மையில் எந்த வளர்ச்சியோ இல்லை இந்த அளவுக்கு முதலீடு இல்லை ." இப்படி ஒரே நாளில் உயர்வது அடுத்த சில நாட்களில் ஒரே நாளில் வீழாதா பங்கு சந்தைக்கு குறியீடுகளை வைத்து நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விட்டது என்பது காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி வைத்து நாக்கால் நக்கிப் பார்ப்பது போல. நிறுவனங்களை இந்த பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் மிரட்ட முடியும் ஒரு நாட்டின் நிதி நிலைமையை அழிக்க வெளிநாட்டு சக்திகள் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த இயலும் எந்த வித ஆயுதமும் இன்றியே ஒரு போரை நிகழ்த்த இயலும் கடன் வாங்கி கொள்ளையடிக்கும் கார்பொரேட் நிறுவனங்கள் இந்த பங்குகள் முதலீட்டை வைத்தே பிழைக்கும் உயர் நடுத்தர வர்க்கமும் பெரு முதலாளிகளும் பிழைக்கலாம் புதிய தொழிற்சாலைகள் இன்றி மதிப்பான நிரந்தர வருமானம் தரும் வேலை வாய்ப்பின்றி நாடு உருப்படாது
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-செப்-201916:18:36 IST Report Abuse
மலரின் மகள்கள் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவங்கள் பங்குகள் மிகவும் குறைந்திருந்த சில வாரங்களில் எய்ச்சேர் மாருதி அசோக் டாடா போன்ற சில குறிப்பிட்ட நிறுவன பங்குகள் ஓரளவிற்கு வாங்கி வைத்திருந்தேன். ஓரிரு தனியார் வங்கி பங்குகளையும் விலை விற் என்று ஏறும் போது விற்று விடலாம் என்று நேற்று காலையில் இருந்து மதியம் முடியும் வரையில் முயன்றிருந்தேன். ஏஸ்பிஐ காப் சேசுரிட்டிஸ் சர்வர் முழுதும் லோக் இந்த செய்ய முடியாமலேயே இருந்தது. வேண்டும் என்றே நிறுத்தி வைத்தார்களா அல்லது அதிகமாக வர்த்தகத்தால் நின்று போனதா தெரியவில்லை. பங்கு வர்த்தகத்தில் பெரும் பணம் செய்வதற்கு பலரின் உதவியும் அவர்களுக்கு தேவைக்கு சற்று அதிகமாக கமிஷனும் தரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X