அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்

Added : செப் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை, :காங்கிரஸ் கட்சி தலைவர், சோனியா மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி, அவதுாறாக பேசி வரும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் ராஜசேகரன்; காங்., பிரமுகர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார், 'டிவி'க்கு அளித்த சிறப்பு பேட்டி, 14, 15ம் தேதிகளிள் ஒளிபரப்பானது. இதில், சோனியா, ராகுல் பற்றி, அவதுாறாக பதில் அளித்துள்ளார்.'ராகுலுக்கு, தாய் மாமன் மடியில் உட்கார வைத்து, இந்தியாவில் மொட்டை போடவில்லை. அதனால், ராகுல் இந்தியர் இல்லை' என, நாலாந்திர நபர் போல பேசி உள்ளார். ஊழல் மற்றும் சொத்து குவிப்பு புகாரில் சிக்கியுள்ள ராஜேந்திரபாலாஜி, கண்ணியக் குறைவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.சோனியா மற்றும் ராகுல் பற்றி அவதுாறாக பேசியுள்ள, ராஜேந்திர பாலாஜி மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-செப்-201922:58:42 IST Report Abuse
D.Ambujavalli ராகுல் பிறந்தது இந்தியாவில்தானே இவரின் கூற்றுப்படி (உளறலின் படி) இந்தியாவில் பிறந்த முஸ்லீம் ,கிறித்துவர்கள் தாய் மாமன் மடி மொட்டை போடாமலும், காதே குத்தாமலும் உள்ளவர்கள் இந்தியர்கள் இல்லையா? என்ன பேத்தல்?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-செப்-201908:41:29 IST Report Abuse
ஆரூர் ரங் ராகுல் சோனியா இருவருமே ஜாமீனில் இருக்கும் குற்றவாளிகள் ராகுல் ஆர் எஸ் எஸ் போட்ட அவதூறு கேஸில் நான்கு வருடமாக தப்பித்து வருகிறான் .அமெரிக்காவில் கட்சித்தலைவராகவோ ஜனாதிபதியாக ஆகவோ அங்கேயே பிறந்தவருக்குத்தான் உரிமை .இங்கு அதுபோலக் கொண்டுவராதது தவறு .ராஜேந்திரபாலாஜி கொஞ்சம் வெகுளியாகப் பேசியிருக்கலாம் ஆனால் அதில் உண்மையும் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Sutha - Chennai,இந்தியா
21-செப்-201906:15:26 IST Report Abuse
Sutha ஆமா.சோனியா ஜாமீனில் இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X