ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்

Added : செப் 20, 2019 | கருத்துகள் (3)
Share

சென்னை, :காங்கிரஸ் கட்சி தலைவர், சோனியா மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி, அவதுாறாக பேசி வரும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் ராஜசேகரன்; காங்., பிரமுகர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார், 'டிவி'க்கு அளித்த சிறப்பு பேட்டி, 14, 15ம் தேதிகளிள் ஒளிபரப்பானது. இதில், சோனியா, ராகுல் பற்றி, அவதுாறாக பதில் அளித்துள்ளார்.'ராகுலுக்கு, தாய் மாமன் மடியில் உட்கார வைத்து, இந்தியாவில் மொட்டை போடவில்லை. அதனால், ராகுல் இந்தியர் இல்லை' என, நாலாந்திர நபர் போல பேசி உள்ளார். ஊழல் மற்றும் சொத்து குவிப்பு புகாரில் சிக்கியுள்ள ராஜேந்திரபாலாஜி, கண்ணியக் குறைவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.சோனியா மற்றும் ராகுல் பற்றி அவதுாறாக பேசியுள்ள, ராஜேந்திர பாலாஜி மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X