பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 5வது முறையாக 'கிருஷி கர்மாண்' விருது

Updated : செப் 21, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 தமிழகம், 5வது முறை, 'கிருஷி கர்மாண்', விருது

சென்னை, :எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில், சாதனை படைத்ததற்காக, 2017 - 18ம் ஆண்டிற்கான, மத்திய அரசின், 'கிருஷி கர்மாண்' விருதுக்கு, ஐந்தாவது முறையாக, தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக அரசு எடுத்த, பல்வேறு முயற்சிகளால், மாநிலத்தில், வேளாண் உற்பத்தி அதிகரித்து உள்ளது. உயரிய சாதனை அடைந்ததற்காக, நான்கு முறை, மத்திய அரசு, 'கிருஷி கர்மாண்' விருதை, தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது.

கடந்த, 2016 - 17ல், தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. அப்போது, அரசு எடுத்த முயற்சியால், 2017 - 18ம் ஆண்டில், 107.13 லட்சம் டன், உணவு தானியம் உற்பத்தி செய்து, சாதனை எட்டப்பட்டு உள்ளது. எண்ணெய் வித்துக்களில், 10.38 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுஉள்ளது. உற்பத்தி திறன், 2.5 ஏக்கருக்கு, 2,729 கிலோ என்ற அளவில் அதிகரித்து உள்ளது. இது, அகில இந்திய சராசரி உற்பத்தி திறனை விட, இரு மடங்கிற்கும் அதிகமாக, 113 சதவீதம் அதிகரித்து ள்ளது.

எண்ணெய் வித்து பயிர்களில், தமிழகம் செய்த சாதனைக்காக, 2017 - 18ம் ஆண்டின், 'கிருஷி கர்மாண்' விருதுக்கு, மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை, வேளாண்மைத் துறை அமைச்சர், துரைக்கண்ணு, செயலர், ககன்தீப்சிங் பேடி ஆகியோர், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் அளித்து, வாழ்த்து பெற்றனர். தமிழக அரசு, வேளாண்மை துறையில், ஐந்து முறை, 'கிருஷி கர்மாண்' விருது பெற்று, சாதனை படைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
21-செப்-201905:04:35 IST Report Abuse
blocked user சூப்பர். சுடலை ஆட்சிக்கு வந்தால் இவை கமிஷன் அடிக்க பெரிய அளவில் உதவி செய்யும்..
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
21-செப்-201903:26:33 IST Report Abuse
Srikanth Tamizanda.. ஆடி கார் ஐயா கண்ணு எங்க? விவசாயமே செத்துப் போச்சு, தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகினர் அப்படி இப்படினு புருடா உட்ட ஒருத்தனும் இப்ப வாயே தொறக்க மாட்டானுகளே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X