சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு கொடுமை நடிகை பானுபிரியா மீது வழக்கு

Added : செப் 20, 2019
Advertisement
 சிறுமிக்கு கொடுமை  நடிகை பானுபிரியா மீது வழக்கு

சென்னை, :வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, நடிகை பானுபிரியா மீது, பாண்டிபஜார் காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தி.நகர், விஜயராகவன்சாலையில், நடிகை பானுபிரியா வீடு உள்ளது. அங்கு, 2018, பிப்ரவரி முதல், ஆந்திராவைச் சேர்ந்த, 16, வயது சிறுமி வேலை செய்து வந்தார். சிறுமியை, அவரது தாயார், பிரபாவதி, 40, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வந்து, சந்தித்து செல்வது வழக்கம். இந்நிலையில், பானு பிரியா, 52, வீட்டில் இருந்த, 10 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய், கேமரா, ஐ பேட், வாட்ச் ஆகியவை திருடு போனது.மகளை பார்க்க வந்த பிரபாவதி, மகளுடன் சேர்ந்து, நகை மற்றும் பணத்தை திருடியதும், விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து, பாண்டி பஜார் போலீசார் விசாரித்தனர். இதில், சிறுமி மற்றும் தாயை, பாண்டிபஜார் போலீசார் கைது செய்தனர். சிறுமியை, கெல்லீஸ் அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும், பிரபாவதியை, புழல் சிறையிலும் அடைத்தனர். போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததால், ஜூலை மாதம், திருட்டு வழக்கில் இருந்து, சிறுமி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கிடையில், ஜன., 25ம் தேதி, தன் மகளை கொடுமைப்படுத்தியதாக, ஆந்திரா மாநிலம், சமலைக்கோட்டை காவல் நிலையத்தில், பானு பிரியா மீது, பிரபாவதி புகார் அளித்தார். இதையடுத்து, பானுபிரியா, அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் நடந்தது, சென்னை என்பதால், ஆந்திரா மாநில போலீசார், முதல் தகவல் அறிக்கையை, பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, பாண்டிபஜார் போலீசார், நடிகை பானு பிரியா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது, சட்டவிரோதமாக இளஞ்சிறாரை பணியமர்த்துதல், அடித்து காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பானுபிரியா, இந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X