சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்...

Updated : செப் 21, 2019 | Added : செப் 20, 2019
Advertisement
 சாந்தி, சாந்தி, என்ற ,சங்கீதம், சுகம் ஏந்தி, ஏந்தி ,வந்து, விழ வேண்டும்...,இன்று, உலக அமைதி, தினம்

உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் 1981 முதல் செப்., 21ல், சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப் படுகிறது.

உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும். 'அமைதி நிலவ பருவநிலையை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
பருவநிலை மாற்றம் இன்றைய உலகின் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. போர் மற்றும் அதனால் இடம்பெயர்வோர்களின் எண்ணிக்கையை விட, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

பருவநிலையை பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் தான், உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். தண்ணீர் பற்றாக்குறையால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் உணவு தேவையை பூர்த்தி செய்வது கடினமாக மாறியுள்ளது.இன்றைய சூழலில், நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது ஆக்கபூர்வ விதத்தில் அமைந்தால் பாராட்டுக்குரியது.

ஆனால் சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகிறது. ஏதாவது இரு நாடுகளில் சண்டை ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த உலக நாடுகளின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். உள்நாட்டு போர் மற்றும் இருநாட்டு போர்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் மற்றும் உடமைகளை இழக்க நேரிடுகிறது. அகதிகளாகவும் மாற்றுகிறது.


போர் தீர்வல்ல



சிரியாவில் உள்நாட்டுப் போர் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இன்னும் சில நாடுகளிடையே உரசல்கள் தொடர்கின்றன. பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அமைதியான உலகை உருவாக்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X