பொது செய்தி

இந்தியா

சிதம்பரத்துக்கு, 'ஜாமின்' சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

Updated : செப் 22, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 சிதம்பரம், 'ஜாமின்' ,சி.பி.ஐ., கடும், எதிர்ப்பு

புதுடில்லி:ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு, 'ஜாமின்' வழங்க, சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரத்தை, ஆகஸ்ட், 21ல், சி.பி.ஐ., கைது செய்தது. அவரை, ஐந்து தவணைகளாக, மொத்தம், 15 நாட்கள் காவலில் எடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது.


திஹார் சிறை



அதன் பின், 5ம் தேதி, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, டில்லி, திஹார் சிறையில், அவர் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.


நம்பிக்கை துரோகம்



இந்த மனுவை கடந்த, 12ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இது பற்றி, சி.பி.ஐ.,க்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:சிதம்பரம், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்த முறைகேடில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மக்கள் நம்பிக்கைக்கு, துரோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப்பட்டால், அது ஊழல் வழக்குகளில் கைதானவர்கள், விடுதலை பெறுவதற்கான முன்னுதாரணமாகி விடும். அதனால், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கக்கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
21-செப்-201915:11:13 IST Report Abuse
S.BASKARAN இவருக்கு ஏன் இன்னும் ஜாமின் கொடுக்க வேண்டும். எத்தனை முறைதான் ஜாமின் கொடுப்பது. வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் போட்டு அடைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-செப்-201912:28:31 IST Report Abuse
Indhuindian திருடுவதற்கும், நாட்டை கொள்ளையடிப்பதற்கும், லஞ்சம் வாங்கி பல நூறு கோடி ருபாய் சொத்து சேர்ப்பதற்கும், அந்நிய செலவாணி மோசடி செய்வதற்கும் ஒரு குறிப்பட்ட வயதுக்கு மேலே செஞ்ச ஜெயிலுக்கு போகவேணாம்னு சட்டம் போடாம விட்டுட்டோமேன்னு இப்போ காங்கிரெஸ்க்காரங்கள்லாம் ரொம்ப வோடிஞ்சி போயிட்டாங்க ஆனா அது அவங்க தப்பு இல்லே இருபது நாலு மணிநேரமும், மூனுற்று அறுபது ஐந்து / ஆறு நாட்ட்களும் (லீப் வாரத்தில்) கொள்ளை அடிப்பதிலேயே கவனம் எல்லாம் இருந்த தாலே அதை பத்தி நினைக்கவே டயமில்லை
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
21-செப்-201917:57:44 IST Report Abuse
uthappaஅவிங்க நாம தான் ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம், எதிர் கட்சியை மாற்று மதக்காரர்களிடம் வெறுக்கும்படி பல பொய் செய்திகளை பரப்பி இருக்கிறோம் என்ற மமதையில் இருந்தார்கள்....
Rate this:
Share this comment
chidambaram - Chennai,இந்தியா
21-செப்-201918:16:50 IST Report Abuse
chidambaramஐயா எல்லா ஒழுக்க சீலர்களும் வெளியிலே தான் இருக்கிறார்கள் பிடிக்கணும்னா எல்லாரையும் பிடிங்க ஏன் ஒருத்தர் மட்டும் இங்கே தமிழ்நாட்டில் எத்தனிப்பேரு இருக்காங்க சிதம்பரம் உங்களுக்கு இப்ப கொடச்சல் அதான்...
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
21-செப்-201911:33:41 IST Report Abuse
sathish என்னையா இது கர்மத்திலும் கர்மம் ஒரு பெரிய பொருளாத மேதையினு சொல்லிக்கிட்டு திரியிற ஜென்மம் எத்தனை தடவைதான் ஜாமீன் ,ஜாமினு புலம்பறது ? கோர்ட்டுக்கே இது போரடிக்கீலய்யா ? தூக்கி போட்டு மிதிச்சு பத்து வருஷத்திற்கு கடுங்காவல் தண்டனை கொடுக்கிறதை விட்டிட்டு ,,அவருக்கு தலையணை பஞ்சு மிட்டாய் வேணுமுன்னு அவர் வக்கீலும் கேட்டு ,,, கேட்டு ,,, காதே புளிச்சு போச்சுங்க . பேப்பர் படிக்கிற ஆசையே விட்டு போச்சு ,,
Rate this:
Share this comment
chidambaram - Chennai,இந்தியா
21-செப்-201918:18:19 IST Report Abuse
chidambaramதனக்கு வந்தா தான் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X