சிதம்பரத்துக்கு, ஜாமின் சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிதம்பரத்துக்கு, 'ஜாமின்' சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

Updated : செப் 22, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (18)
Share
 சிதம்பரம், 'ஜாமின்' ,சி.பி.ஐ., கடும், எதிர்ப்பு

புதுடில்லி:ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு, 'ஜாமின்' வழங்க, சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரத்தை, ஆகஸ்ட், 21ல், சி.பி.ஐ., கைது செய்தது. அவரை, ஐந்து தவணைகளாக, மொத்தம், 15 நாட்கள் காவலில் எடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது.


திஹார் சிறை



அதன் பின், 5ம் தேதி, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, டில்லி, திஹார் சிறையில், அவர் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.


நம்பிக்கை துரோகம்



இந்த மனுவை கடந்த, 12ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இது பற்றி, சி.பி.ஐ.,க்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:சிதம்பரம், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்த முறைகேடில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மக்கள் நம்பிக்கைக்கு, துரோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப்பட்டால், அது ஊழல் வழக்குகளில் கைதானவர்கள், விடுதலை பெறுவதற்கான முன்னுதாரணமாகி விடும். அதனால், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கக்கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X