சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூறாவளியுடன் கனமழை 3000 வாழைகள் சாய்ந்தன

Added : செப் 20, 2019
Share
Advertisement
சூறாவளியுடன் கனமழை 3000 வாழைகள் சாய்ந்தன

பரமக்குடி, ராமநாதபுரம் அருகே சூறைக்காற்றுடன் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் 3000 வாழை மரங்கள் சாய்ந்தன.ராமநாதபுரம் அருகே பாண்டியூர் மற்றும் அரசடிவண்டல் பகுதியில் 10 ஏக்கரில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வாழை சாகுபடி செய்திருந்தனர். நேற்று பகல் 2:30 மணிக்கு துவங்கிய மழை 4:30 வரை கொட்டித் தீர்த்தது. இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்றும் வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.முத்துராமலிங்கம், சித்திரமுத்து, பொன் சரவணவேல், நாகரத்தினம், மாரிமுத்து, பாண்டி, செல்லம், ராமு, ராஜ்குமார் உட்பட பல விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 7500 வாழைகளில் 3000 சாய்ந்தன. குலை தள்ளிய நிலையில் சாய்ந்ததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.மேலும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரால் மற்ற வாழைகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முத்தரசன் நேரில் ஆய்வு செய்தார். பின் அவர் கூறுகையில், பாண்டியூரில் 3010 வாழைகள் சாய்ந்துள்ளன. 33 சதவீதத்திற்கும் மேல் இழப்பு இருந்தால் நிவாரணம் வழங்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X