சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மேற்கூரையை சீரமைப்பதில் தொய்வு

Added : செப் 20, 2019
Share
Advertisement

கமுதி : கமுதி அருகே கடந்த வாரம் வீசிய சூறாவளிக் காற்றில் சேதமடைந்த பள்ளி மேற்கூரையை சீரமைப்பதில்தாமதம் ஏற்பட்டுள்ளதால்மாணவர்களின் பாதுகாப்பு கருதி அடிப்படை வசதிகளற்றஇ-சேவை மைய கட்டடத்தில் மாணவர்கள் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கமுதி அருகே எருமைகுளத்தில் செப்.,14ல் கனமழையுடன் சூறாவளிக்காற்று வீசியது. இதில்அரசு துவக்கப்பள்ளியின் மேற்கூரை ஓடுகள் காற்றில் பறந்து சேதமடைந்தன. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதையடுத்து, இப்பள்ளியில் உள்ள 16 மாணவர்களும்எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாத எருமைகுளம் இ சேவை மைய கட்டடத்தில் படிக்கின்றனர்.இங்குகழிப்பறை, குடிநீர், கரும்பலகை வசதி இல்லாததால் பெயரளவில் மட்டுமே வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.

கழிப்பறைக்காக மாணவர்கள் அருகே காட்டுப்பகுதிகளிலும், குடிநீருக்காக வீடுகளை தேடியும்செல்லும் அவலநிலைக்குஆளாகியுள்ளனர். சேதமடைந்த அரசு பள்ளி கட்டடத்தை சீரமைக்ககோரி எருமைகுளம் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்அளித்தும், சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தொய்வால், இ-சேவை மைய கட்டடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் தற்காலிகமாக நடத்தபடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X