சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டுவரியை குறைக்க லஞ்சம் ஒட்டன்சத்திரம் அதிகாரி கைது

Added : செப் 20, 2019
Share
Advertisement

ஒட்டன்சத்திரம், வீட்டு வரியை குறைப்பதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற, ஒட்டன்சத்திரம் வருவாய் உதவியாளர் கிருஷ்ணனை 48, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், இருளக்குடும்பன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன். ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வீடு கட்டி உள்ளார். வீட்டு வரி கட்டுவதற்காக வருவாய் உதவியாளர் கிருஷ்ணனை சந்தித்துள்ளார். அப்போது ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வீட்டின் மதிப்பை குறைப்பதன் மூலம் வீட்டு வரியை குறைக்கலாம் என்று கூறியுள்ளார். பேரம் பேசி இறுதியில் ரூ.6 ஆயிரம் பெற ஒப்புக் கொண்டார்.திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் ராமச்சந்திரன் புகார் செய்தார். டி.எஸ்.பி., நாகராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ராஜேஸ்வரி மற்றும் போலீசார் ஒட்டன்சத்திரம் வந்தனர். ரசாயன பவுடர் தடுவிய ரூ.6 ஆயிரத்தை கிருஷ்ணனிடம் கொடுக்குமாறு ராமச்சந்திரனிடம் தெரிவித்தனர். அவர் பணத்தை வாங்கியபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X