சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் சரிந்து தந்தை, மகன் பலி

Added : செப் 20, 2019
Advertisement

சாத்துார், விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே வைப்பாற்றில் மணல் அள்ளியபோது மண்சரிந்ததில் பிள்ளையார் 55, மகன் மாரியப்பன் 35, பலியாகினர்.விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் பிள்ளையார். மகன் மாரியப்பனுடன் கோட்டைப்பட்டி பகுதி வைப்பாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்று வந்துள்ளார். நேற்று மாலை 4:00 மணிக்கு வைப்பாற்றின் தடுப்பணை அருகில் பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர். குகைபோல் தோண்டி எடுத்ததில் மண் சரிந்தது. இதில் இருவரும் மண்ணில் புதைந்தனர்.அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு சிவகாசி தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே இருவரும் இறந்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X