பொது செய்தி

இந்தியா

கிரைண்டருக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு:புளிக்கு வரி ரத்து

Updated : செப் 22, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (7)
Advertisement
கிரைண்டர், ஜி.எஸ்.டி., குறைப்பு, புளி, வரி ரத்து

பனாஜி: மாவு அரைக்கும் 'வெட் கிரைண்டர்'களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கோவா தலைநகர் பனாஜியில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 37வது கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:இட்லி, தோசை மாவு அரைக்கும் 'வெட் கிரைண்டர்'களுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப் படுகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளிக்கு விதிக்கப்பட்டு வந்த 5 சதவீத ஜி.எஸ்.டி. முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

ஓட்டல் அறையின் தின வாடகை 1,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் ஜி.எஸ்.டி. கிடையாது. ஓட்டல் அறைகளுக்கு 1,001 முதல் 7,500 ரூபாய் வரை விதிக்கப்படும் வாடகைக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜி.எஸ்.டி. 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 7,501 ரூபாய்க்கு விதிக்கப்படும் ஓட்டல் அறை வாடகைக்கு18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் ராணுவ தளவாடங்களுக்கு ஜி.எஸ்.டி. முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த மாற்றம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-செப்-201921:24:56 IST Report Abuse
Mirthika Sathiamoorthi Akshaya திதியில் தங்கம் வாங்க அலைமோதும் மக்கள் போல..கிரைண்டர் வாங்க காத்துக்கிடக்கும் மக்களுக்கு இது ஒரு அறியவாய்ப்பு...கிரைட்டரை அள்ளிக்கோங்க...முடிந்தால் ரெண்டா வாங்கிக்கோங்க...இட்லி தோசை வடை தான் வீட்டில் புளியும் கொறச்சிருக்க...இனி புளிசாதம்தான் போங்க...அரசின் கடமை குறைந்த விலையில் உணவு பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்...உணவு பொருளின் விலையை குறைத்து அதை கடமையாய் கருதாமல் பெருமைப்படும் ஒரே அரசு நம்மை ஆளும் அரசு.....தலையெழுத்து..
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-செப்-201913:47:36 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆனால் இதற்குமுன் ஊமைத்துரை ஆட்சியில் இருந்தபோது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, காய்கறிவிலைகள் இருநூறு, நூறு என்று தங்கத்தை விட அதிக விலைக்கு விற்று சாதனை படைத்தது. மக்கள் தங்கத்திற்கு தரும் மதிப்பை இவைகளுக்கு தந்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்கள் இல்லையா. அந்த அரசையே சமாளித்த மக்களுக்கு இதை சமாளிக்க முடியாதா என்ன....
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201919:05:20 IST Report Abuse
ஆப்பு ஒரு ரூவாய்க்கு இரண்டு இட்லி கிடைக்கும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-201922:10:57 IST Report Abuse
தமிழ்வேல் ஒருவாய் குதான் போகும். மினி இட்லி.😁😁😁...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-201911:04:56 IST Report Abuse
Bhaskaran ஹோட்டல் உணவு பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரியை குறைத்தால் உபயோகமாக இருக்கும் ,தினசரியா மக்கள் கிரைண்டர் வாங்குகின்றனர் என்ன நியாயமையா இது
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-201918:27:44 IST Report Abuse
தமிழ்வேல் ஆனா, திணைக்கும் இட்லி சாப்பிடலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X