அரசியல் செய்தி

தமிழ்நாடு

அலட்சியத்தால் மரணம் கொலைக்கு சமம்: கமல்

Updated : செப் 21, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (4+ 57)
Advertisement

சென்னை: ''அலட்சியத்தால் ஏற்படும் மரணத்தை, கொலை குற்றமாக கருத வேண்டும்,'' என, கமல் கூறினார்.

அண்டை நாடான வங்க தேசத்தில் இருந்து வந்த மாணவர்கள், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலை, நேற்று, சென்னையில் உள்ள, அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.அப்போது, கமல் அளித்த பேட்டி:







வங்கதேசத்தின், ஜங்கல்மெகல் என்ற பகுதியிலிருந்து மாணவர்கள், என்னை பார்க்க வந்து உள்ளனர்.கிராமத்தில் இருந்து, ஆறு ஆண்டுகளாக வர முடியாத சூழலில், இவர்கள் இருந்தனர். சமூக ஆர்வலர்களால், இவர்கள் வெளியே அழைத்து வரப்பட்டுள்ளனர்.என்னை சந்திக்க அவர்கள் ஆர்வமாக இருந்தனர்; நானும் ஆவலாக இருந்ததால், சந்திப்பு நடந்துள்ளது. இவர்களுடன் இணைந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்கிறேன்.


வங்கதேசத்திலிருந்து வந்த மாணவர்களுடன் கமல். இடம்: சென்னை.

வங்கதேசத்திலிருந்து வந்த மாணவர்களுடன் கமல். இடம்: சென்னை.





இயற்கையால் எல்லாருக்கும் மரணம் உண்டு. ஆனால், இங்கு அலட்சியத்தால் மரணம் நிகழ்கிறது. அதை கொலை குற்றமாகவே கருத வேண்டும். இந்த அரசில், கயவர்கள் தப்பிக்கும் நிலை உள்ளது.என் கட்சி மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட பேனர்களை, உரிய அனுமதி பெற்று, பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என, ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்.நடிகர் விஜய் கூறியுள்ள கருத்தில், மறைமுகம் இருப்பதாகதெரியவில்லை; நேரடியாகவே சொல்லியுள்ளார். ஆனால், யாரையும் அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை.இவ்வாறு, கமல்கூறினார்.

இதற்கிடையில், டுவிட்டரில், கமல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:உலகத்தில் மிக கொடுமை யான விஷயம் எது தெரியுமா... வாழ வேண்டிய பெண்ணின் மரண செய்தியை, பெற்றோர் கேட்பது. சுபஸ்ரீ மரணம் அப்படிப்பட்டது தான்.தன் பெண்ணின் ரத்தம் சாலையில் சிந்தி இருப்பதை பார்க்கும் போது, பெற்றோருக்கு மட்டுமல்ல, அனைவரது மனதிலும் திகிலும், மரண வலியும் கண்டிப்பாக வரும்.பெண்களை பெற்றவன் என்ற முறையில், எனக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகு, சுபஸ்ரீக்கள் அரசின் அலட்சியத்தால் கொல்லப்படுகின்றனர்.

கொஞ்சமாவது அறிவு வேண்டாமா... எங்கு பேனர் வைப்பது, வைக்கக்கூடாது என, தெரிய வேண்டாமா... இவர்களை போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காடு அரசியல்வாதிகளாலும், இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படப் போகிறதோ.எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால், 'நாக்கை அறுப்பேன்' என, மிரட்டுவதும் தான், இவர்களுக்கு தெரிந்த அரசியல்.
இந்த மாதிரி ஆட்களின் மீது, எனக்கு மயிரிழை அளவு கூட, மரியாதையும், பயமும் கிடையாது. ஒரு வேளை உங்களுக்கு பயம் இருந்தால், என் கையை பிடித்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதி மையம் உங்கள் சார்பாக, அந்த தவறுகளை தட்டிக் கேட்டு, தீர்வும் தேடித் தரும்.வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம்; புதிய தலைமுறையை உருவாக்குவோம்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201911:33:34 IST Report Abuse
கதிர்   கோவை திமுக வின் b டீம் கமல்
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201909:53:37 IST Report Abuse
மதுவந்தி அநியாயமான உயிர் இழப்பு என்று அனைவருக்கும் தெரியும். அரசியலுக்கு வந்தவரும் வரப்போகறவருக்கும் Action என்று சொன்னால் தான் பேசிக்கொண்டே இருக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
21-செப்-201905:29:30 IST Report Abuse
Palanisamy Sekar சிறந்த வசனத்தை ஒப்புவித்துவிட்டார் கமல். ஒரு சினிமா வெளியீடு விஷயத்தில் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்ன உத்தமர்தான் இந்த கமல். ஏன் இவர் செல்லுமிடமெல்லாம் இதே பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படவில்லையா? அல்லது பயணிக்கும்போதெல்லாம் இவை இவர் கண்ணுக்கு தென்படவில்லையா? அப்போதெல்லாம் இப்படி ஓர் சம்பவம் நடக்க சந்தர்ப்பம் உண்டு என்றெல்லாம் இப்படி வசனத்தை ஏன் அள்ளிவிடவில்லை? திடீர் ஞானோதயம் வந்த புத்தர் மாதிரி பேசக்கூடாது. இவரது வசனத்தை அந்த காலத்திலேயே யாருமே சட்டை செய்யமாட்டார்கள். திமுகவின் பினாமி இவர்..யோக்கிய வேஷமெல்லாம் இங்கே எடுபடாது. கருப்பு பணமே வாங்காமல் நடித்தேன் என்று சொல்வாரா மனம் திறந்து..அதன் பெயர் என்னவாம்? அதற்கு என்னவகையான கொலை என்று சொல்லலாம்? திருடுத்தனம்தானே அது? நாட்டை ஏமாற்றி கள்ளப்பணம் வாங்கிய வகையில் இவர் செய்தது எந்தவகை கொலை?பலபேர் பட்டினி கிடைக்க இவர் செய்தது அப்படிப்பட்ட செயல்தான்..அது ஒருவகை கொலை..ஒரே நேரத்தில் பல் ஏழைகளை பட்டினிபோட செய்த கொலை..கமல் செய்தால் அது சரியாகிவிடுமா என்ன? இப்படிப்பட்ட நபர் கமல் மீது நமக்கு கேசத்தின் முனை அளவு கூட மதிப்போ மரியாதையோ வருவதில்லை..இன்னிக்குதான் பிறந்த மஹா உத்தமர் போல வேஷம் போடக்கூடாது..இதனை சொன்னால்..என்னை ஆப்கானிஸ்தானுக்கு அழைக்கின்றார்கள்..நான் நாட்டை விட்டுப்போய்விடுவேன் என்று சொல்வார்..நமக்கு இப்படிப்பட்ட நபரை சொல்லிக்காட்ட..அவர் வெளியேற..வேண்டாமே பாவம்ன்னு விட்டுவிடுவோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X