அரசியல் செய்தி

தமிழ்நாடு

கீழடியில் அருங்காட்சியகம் ஸ்டாலின் கோரிக்கை

Added : செப் 20, 2019 | கருத்துகள் (13)
Advertisement
கீழடியில் அருங்காட்சியகம் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, 'தமிழர்கள் கி.மு. 6ம் நுாற்றாண்டில் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்குரிய வரலாற்றுச் சான்றை கீழடி ஆய்வறிக்கையில் வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நாகரிகம்' என்ற தலைப்பில் தமிழக தொல்லியல் துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பாராட்டுக்குரியது; வரவேற்கத்தக்கது. இந்த ஆய்வின் முடிவுகளால் உலக நாகரிகங்களில் தமிழர் நாகரிகம் முற்பட்ட நாகரிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.கி.மு. 6ம் நுாற்றாண்டில் தமிழர்களிடம் எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதும் தமிழர் சமுதாயம் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக இருந்திருக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.கீழடி அகழாய்வு இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும். தொல்லியல் துறை சென்னை வட்ட அலுவலகத்தை பிரித்து மதுரையை தலைமையிடமாக்கி ஒரு அலுவலகம் உருவாக்க வேண்டும். கீழடியிலும் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
21-செப்-201916:06:31 IST Report Abuse
TAMILAN தெலுங்கர் உங்களால் எங்கள் தமிழ் சமுதாயம் பின்னோக்கி தள்ளப்பட்டு உள்ளது. தேர்தல்களில் அறுபது சதவீதத்திக்கு மேல் தெலுங்கர்களுக்கு சீட் ஒதுக்கியிருந்தீர்கள். நாங்கள் தமிழ் நாட்டில் வாழ்கின்றோமா அல்லது தெலுங்கு நாட்டில் வாழுகின்றோமா என்ற கவலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது . பெரும்பான்மை தமிழர்களுக்கு வெறும் 35 சதவிகிதம்,.உங்கள் அப்பாரு கருணா எல்லா தமிழ் பேசும் தெலுங்கர்களுக்கு அரசுபபதவியை கொடுத்தார். இனவெறி கொண்டு தமிழர்களை வஞ்சித்தார். எங்கள் முன்னே முன்னே தமிழ் தமிழ் என்று பேசினார். நீங்களும் அப்படித்தானோ என்று தமிழர்கள் நாங்கள் நினைக்கின்றோம். கீழடியில் அருங்காட்சியகம் கோரிக்கை என்பதும் உங்கள் நடிப்பே . ந ன்றி
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-201916:02:01 IST Report Abuse
 Muruga Vel கிமு ...கீப்பு … இவர் பேசிய வீடியோ பார்த்து வயிறு வலிச்சது ...
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
21-செப்-201914:39:53 IST Report Abuse
sridhar கீழடியை கில்லாடி என்றும் சங்க காலத்தை சங்கு கோலம் என்றும் படித்தாராமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X