'பாக்., தரம் தாழ்ந்தாலும் இந்தியா உயர்ந்து நிற்கும் ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் திட்ட வட்டம்

Updated : செப் 21, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (1+ 33)
Advertisement
பாக்., தரம், இந்தியா, உயர்ந்து நிற்கும், இந்திய தூதர்,ஐ.நா.,

நியூயார்க்:''பாகிஸ்தான் எவ்வளவு கீழ்நிலைக்கு இறங்கினாலும், அவர்களுக்கு முன் எப்போதும் இந்தியா உயர்ந்து நிற்கும்,'' என, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர், சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.ஐ.நா., சபையின், 74ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24ம் தேதி முதல், 30 வரை நடக்கிறது.

வரும், 27ம் தேதி, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதே போல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியலமைப்பின், 370வது பிரிவை, மத்திய அரசு, கடந்த மாதம், 5-ம் தேதி நீக்கியது.


உதவாது



இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தை, ஐ.நா., சபையில் முறையிட்டுள்ள பாகிஸ்தான், இது தொடர்பாக பொது சபை கூட்டத்தில் விவாதிக்க, கடிதமும் அளித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா.,வுக் கான இந்தியாவின் நிரந்தர துாதர், சையத் அக்பருதீன், சர்வதேச செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும், முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், நாங்கள் எந்த அளவுக்கு மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு செயல்பட்டு வருகிறோம் என்பதையும், இந்தியா ஏற்கனவே விளக்கியுள்ளது. ஆனால், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பிரச்னையை ஏற்படுத்த, சிலர் விரும்புகின்றனர். இந்தப் பிரச்னையை, இதற்கு முன்னரும் எழுப்பியுள்ளனர். அவர்களின் பயங்கரவாதத்தை நாங்கள் பார்த்து விட்டோம்.

இப்போது, சர்வதேச சபைகளில், வெறுப்புணர்வு பேச்சில், அவர்கள் முக்கியத்துவம் செலுத்து கின்றனர். வெறுப்பை விதைக்க முடிவு செய்தால், நிச்சயமாக, அவர்கள் அதை செய்யலாம். ஆனால், விஷம் தோய்ந்த பேனாக்கள் எல்லா நேரங்களிலும் உதவுவதில்லை.சொல்ல முடியாதுசர்வதேச தளங்களை எப்படி அணுகுவது என்பதில், ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு அணுகுமுறை இருக்கும். சிலர், எந்த கீழ்நிலைக்கும் இறங்குவர்; அப்படி இறங்குபவர்களுக்கு முன்னாலும் கூட, இந்தியாவின் நிலை உயர்ந்து நிற்கும்.

இப்பிரச்னையில், இந்தியா எந்த வகையான உத்தியை பயன்படுத்தும் என்பதை வெளிப்படை யாக சொல்ல முடியாது. இவ்வாறு, அக்பருதீன் கூறினார்.இதற்கிடையே, ''ஐ.நா., பொது சபை கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து, பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் பேசக்கூடும்,'' என, அவரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:காஷ்மீர் விவகாரம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என, ஐ.நா. பொதுச் செயலர் தெளிவாக கூறியுள்ளார். அதே போல, காஷ்மீரில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற விஷயத்திலும், அவர் உறுதியாக இருக்கிறார்.

ஏற்கனவே அவர் வலியுறுத்தியது போல, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து, பொதுச் செயலர் குட்டரெஸ் பேசக்கூடும். அதே நேரம், இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே, இந்த விவகாரத்தில், ஐ.நா., தலையிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஹூஸ்டனில் புயல் மழை 'ஹவ்டி மோடி' நடக்குமா?



அமெரிக்கா வரும், பிரதமர் நரேந்திர மோடி, டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில், செப்., 22ல் நடக்கும், 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில், வெளிநாட்டு தலைவருக்கு அளிக்கப்படும், மிகப்பெரிய வரவேற்பு நிகழ்ச்சியாக இது அமைய உள்ளது. இதில் பங்கேற்க, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர், டிரம்பும் பங்கேற்று, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், 'இமெல்டா' புயல் காரணமாக, டெக்சாஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மாகாணத்தின் பல பகுதிகளில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகரில், மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக, ஹூஸ்டனில், விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், பிரதமர் மோடி பங்கேற்கும், ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆனாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஒருங்கிணைப்பாளர்களும், இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த, இடைவிடாது சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில், 1,500 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்படும் என்றும், அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில், முதல்முறையாக போட்டியிடும், இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெற்றுள்ள, ஜனநாயக கட்சி வேட்பாளர், துள்சி கப்பார்டு, ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின், அமெரிக்கா வருகையை வரவேற்றுள்ள அவர், வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதால், இதில் கலந்து கொள்ள முடியவில்லை என, 'வீடியோ' செய்தியில் தெரிவித்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியா விட்டாலும், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக, துள்சி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
21-செப்-201905:02:54 IST Report Abuse
blocked user திவாலாகும் நிலையில் இருந்தும் கூட இன்றுவரை தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பமுயலும் வீரமான ஒரு இராணுவத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் மார்தட்டிக்கொள்வது சர்வதேச அளவில் கேவலம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X