சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆதினம் சொத்துக்களை மீட்கும் வழக்கில் உத்தரவு

Added : செப் 20, 2019
Share
Advertisement

மதுரை : மதுரை ஆதினம் மடம் மேலாளர் கார்த்திகேயன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாறவர்மனால், மதுரை ஆதின மடத்திற்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது.

பல இடங்களில் உள்ள இச்சொத்துக்களை, சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவர்களை அகற்றி, மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்க அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் புகார் செய்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதி எம்.கோவிந்தராஜ் விசாரித்தார். அறநிலையத்துறை தரப்பு, 'ஆதின மடம் அனுப்பிய மனுவில் போதிய விபரங்கள் இல்லை. சில குறைபாடுகள் இருந்தன.

அவற்றை சரி செய்து தர திரும்ப அனுப்பப்பட்டது,' என தெரிவித்தது. நீதிபதி: மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை அறநிலையத்துறை இணை கமிஷனர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X