எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பதாரர்கள் அலைக்கழிப்பு! கட்டுமான துறையினர் சரமாரி புகார்

Updated : செப் 21, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
குடும்ப உறுப்பினர்களுக்குள் பங்கு பிரிக்கப்பட்ட மனைகளை, வரன்முறை செய்ய வரும் விண்ணப்பதாரர்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அலைக்கழிப்பதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், 2016 அக்.,20க்கு முன் உருவான, அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இதில், விண்ணப்பங்கள் பெறுவதற்கான கால அவகாசம், 2018 நவ., 3ல்
 சி.எம்.டி.ஏ, விண்ணப்பதாரர்கள், அலைக்கழிப்பு, புகார்

குடும்ப உறுப்பினர்களுக்குள் பங்கு பிரிக்கப்பட்ட மனைகளை, வரன்முறை செய்ய வரும் விண்ணப்பதாரர்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அலைக்கழிப்பதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்
.தமிழகத்தில், 2016 அக்.,20க்கு முன் உருவான, அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இதில், விண்ணப்பங்கள் பெறுவதற்கான கால அவகாசம், 2018 நவ., 3ல் முடிவடைந்தது.
இத்திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், பெரும்பாலான மனுக்கள், தனி மனைகள் தொடர்பானவை. இதில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மனைப்பிரிவில் இருந்து வாங்கப்பட்ட மனைகள் தொடர்பாக, ஏராளமான வரன்முறை விண்ணப்பங்கள் வந்துள்ளன.இந்த மனைகளுக்கு, மனைப்பிரிவு வரைபடம் இருக்கும்.

இதன் அடிப்படையில், 'பிரேம் ஒர்க்' எனப்படும், தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படும். இதற்கான அதிகாரம், சி.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், குடும்ப உறுப்பினர்களுக்குள், நிலம், மனைகளாக பங்கிடப்பட்ட நிலையில், மனைப்பிரிவு வரைபடம் இருக்காது. நில அளவை வரைபடம் மட்டுமே இருக்கும்.

இத்தகைய மனைகளை வரன்முறை செய்ய விண்ணப்பித்தவர்கள், 500க்கும் மேற்பட்டோர், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, இந்திய கட்டுனர், வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய தலைவர், எஸ்.ராமபிரபு கூறியதாவது:குடும்ப உறுப்பினர்களுக்குள் பிரிக்கப்பட்ட, குறைந்த பரப்பளவுள்ள மனைகளை வரன்முறை படுத்துவதற்கான விண்ணப்பங்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பரிசீலிக்க மறுக்கின்றனர். மாநகராட்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கு, விண்ணப்பதாரர்களை அனுப்புகின்றனர்.

ஆனால், வரன்முறைக்கான அதிகார பகிர்வு வழங்கப்படாத நிலையில், எங்களால் எதுவும் செய்ய முடியாது என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், விண்ணப்பதாரர்கள் எங்கு செல்வது என, தெரியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற மனைகளுக்கு, தொழில்நுட்ப அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முன்வர வேண்டும். இது தொடர்பானவழிமுறைகளை, தெளிவாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Chennai,இந்தியா
21-செப்-201920:28:18 IST Report Abuse
Sridhar அறிவாளிகள் நிறைந்த தமிழகத்தில் மக்கள் நேர்மையான முறையில் குறைந்த நேரத்தில் அனுமதி பெறும் நாள் வரும் என்று சர்வ வல்லமை அதிகாரம் பெற்ற முதல் அமைச்சரை வேண்டுவோம். அவர் கருணை கிடைக்குமா?
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-செப்-201917:13:20 IST Report Abuse
Darmavan நம் முன்னோர்கள் செய்த தவறை நாம் அனுபவிக்கிறோம்.தீர்த்தடுக்கப்பட்டவனுக்கும்/அதிகாரிகளுக்கும் சட்டம் கால நிர்ணயம் செய்யப்பட்ட வேலை கொடுக்க வேண்டும்.தன்னைப்போல் தியாகிகளாக இருப்பார்கள் என்று எண்ணி சட்டம் போட்டார்கள் இப்போது கருநாகங்கள் அங்கே வந்துவிட்டன.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-செப்-201910:10:04 IST Report Abuse
Lion Drsekar தினமலரில் நடைபாதைகளில் மாமூல் வசூல் தொகை யார் யாருக்கு போகிறது என்று மிக அருமையாக வெளியிட்டிருந்தார்கள் ஆகவே நாமும் உண்மையைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை, சிறிய அளவில் வீடு கட்டவேண்டும் என்றால் குறைந்தது மின்சாரத்துறை, குடிநீர் துறை, மாநரகாட்சி மொத்தமாக ஒரு லட்சம் லஞ்சம் கொடுக்கவேண்டும், இது எழுதப்படாத விதி, இதில் அனைவரும் கூறுவது எங்களுக்கு இதில் எந்த பங்கும் இல்லை எல்லாம் அவர்களுக்கு என்று ஒரே நபரை சுட்டிக்காட்டுவார்கள், அவரிடம் நாமே நேரில் சென்றால் பலமடங்கு செலவு அதிகமாகும், இதே பெரிய கட்டிடங்களாக இருந்தால் சி.எம்.டி.ஏ.,வில் கால் வைத்தால் மட்டுமே நடக்கும், அங்கு யார் ஒருவர் சென்று வெற்றிகரமாக தனது வேலையை முடித்து விட்டு வெளியே வருகிறாரோ அவர் உலகம் முழுவதும் சுற்றிவரும் அனுபவத்தை விட மிக அதிகமாக அனுபவங்களை பெற்றுவிடுவார்கள். அந்த அளவுக்கு சோதனைகளும், வேதனைகளும், பல லட்சம் கோடி பண விரயங்கள் கணக்கிலடங்கா துன்பங்களை அனுபவித்தால் மட்டுமே விளங்கும், இதுதான் ஜனநாயகம், இதற்குதான் சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள் நம் முன்னோர்கள், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X